For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பை, கோவாவில் இன்று கனமழை பெய்யும்.. அவசர உதவி எண்கள் அறிவிப்பு

மும்பை, கோவாவில் இன்று கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. பல இடங்களில் தொடர்பு துண்டிக்கப்பட வாய்ப்புள்ளதால் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மும்பைக்கு கனமழை- கேரளா மீனவர்களுக்கு எச்சரிக்கை- வீடியோ

    டெல்லி: மும்பை, கோவாவில் இன்று கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. பல இடங்களில் தொடர்பு துண்டிக்கப்பட வாய்ப்புள்ளதால் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை, தானே நகரங்களில் நேற்று முழுக்க முழுக்க மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை இன்றும் தொடரும் என்று கூறப்படுகிறது. இன்னும் 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    Monsoon update: Very Heavy rain expected in Mumbai, Goa and Coastal areas

    இந்த மழை மும்பை, கோவா, கர்நாடகா, ஆந்திராவின் சில பகுதிகளில் பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாநிலங்களில் உள்ள மீனவர்கள் யாரும் ஒரு வாரம் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த மழை இந்த வருடத்தின் மிகவும் தீவிரமான மழையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மும்பை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று மிக அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா ராயலசீமா பகுதிகள், தெலுங்கானாவின் சில பகுதிகள், கடலோர ஆந்திரா, கேரளா ஆகிய இடங்களுக்கும் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இதனால் இந்த நான்கு மாவட்டங்களில் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. நேற்றே மும்பையிலும், கோவாவில் சில விமானங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டது. நேற்றே மும்பையில் சாலை முழுக்க தண்ணீர் தேங்கி இருந்தது. இதனால் இன்று அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

    இந்த மழையில் மக்கள் தொடர்பு துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது. மும்பைவாசிகள் 1916 என்கிற எண்ணுக்கும் மும்பை தவிர்த்த இதர பகுதியினர் 1077 என்ற எண்ணுக்கும் அவசர உதவிகளை கேட்டுப் பெறலாம்.

    இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, மத்திய இந்திய பகுதிகள் வழக்கமான மழையைப் பெறும். ஆனால் தென்னிந்திய தீபகற்ப பகுதிகளாக கர்நாடகா, தெலுங்காக, ஆந்திரா, தமிழகம், கேரளா மற்றும் புதுவை மாநிலங்கள் வழக்கத்துக்கும் குறைவான மழையைப் பெறும் என தெரிவித்துள்ளது.

    வடகிழக்கு இந்தியாவில் வழக்கத்தையும் விட மிக குறைவான மழை பெய்யும். ஜூலை மாதத்தில் நாடு முழுவதும் மழையின் அளவு 101% இருக்கும். ஆகஸ்ட்டில் 94% ஆக இருக்கும். மழைப்பொழிவு 90%- 96% என்பது வழக்கத்தைவிட குறைவு. 96%-104% என்பது வழக்கமான மழைப் பொழிவு. 104%-110% என்பது வழக்கத்தை விட அதிகமான மழைப்பொழிவு. 110%-க்கு அதிகம் என்பது மிக அதிக மழைப்பொழிவாக கருதப்படும்.

    வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு

    English summary
    An alert has been sounded in Mumbai and Thane as heavy downpour is expected in the next two days. Fishermen in Kerala and Lakshadweep have been advised to not venture into parts of the Arabian Sea off the Konkan and Goa coast between June 8 and 12.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X