செம்மரக் கடத்தல் பணத்தில் நீத்துவுடன் கும்மாளம் போட்ட தெலுங்குத் தயாரிப்பாளர் மஸ்தான்!
கர்னூல்: செம்மரக் கடத்தல் மூலம் கோடி கோடியாக சம்பாதித்த பணத்தை நடிகை நீத்துவிடம் அள்ளி இறைத்து அவரை கைக்குள் போட்டுக் கொண்டு கும்மாளமான வாழ்க்கை வாழ்ந்துள்ளார் கைதான தெலுங்குப் படத் தயாரிப்பாளர் மஸ்தான் வாலி என்று தெரிய வந்துள்ளது.
இருவரும் இந்த கடத்தல் பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளதாக போலீஸார் கூறுகிறார்கள்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவரான மஸ்தான் வாலியுடன், அவரது சகோதரர் சங்கர்நாயக்கும் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மஸ்தான் செம்மரக் கடத்தலில் கிடைத்த பணத்தின் மூலம் சினிமா படம் தயாரிப்பில் ஈடுபட்டதும், அவரது படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை நீத்து அகர்வாலை காதலியாக வைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் நடத்தியதும் தெரியவந்தது.
செம்மரக் கடத்தலில் நடிகை நீத்துவுக்கும் தொடர்பு உள்ளது. நீத்துவுக்கு ரூ.35 லட்சம் மதிப்புள்ள பங்களாவை மஸ்தான் வாலி கட்டி கொடுத்துள்ளதாகவும், அதில் இருவரும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மஸ்தான் வாலி செம்மரக் கடத்தலில் கிடைத்த பணத்தை நடிகை நீத்துவிடம் கொடுத்து, அவரது வங்கி கணக்கில் போட்டுள்ளார். பின்னர் வங்கி கணக்கில் இருந்து தனக்கு தேவைப்படும் போது தேவையான பணத்தை எடுத்து இருக்கிறார்.
தற்போது வாலி கைது செய்யப்பட்டு விட்டார். நீத்து தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க போலீஸார் தீவிரமாக முயன்று வருகின்றனராம்.












Click it and Unblock the Notifications