அதிகரிக்கும் வெப்பநிலை... பறக்கும் வெடிகுண்டுகளாக மாறும் கொசுக்கள்...
டெல்லி: இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால், கொசுக்களின் உற்பத்தி பெருகிவிட்டது. இதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ம் தேதி (இன்று) கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருளாக ‘சிறிய கடி, பெரிய அச்சம்' என்பதை உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித் துள்ளது.
அதாவது, கொசுக்கள் போன்ற பூச்சிகளால் பரவும் நோய் களில் இருந்து நம்மை நாமே பாது காத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.

வெப்பநிலை அதிகரிப்பு
மே மாதத்தில் அக்னி நட்சத்திர காலத்தில்தான் அனல் காற்று வீசுவதோடு வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் அளவை தாண்டும். ஆனால் மார்ச் மாதம் முதலே தமிழ்நாட்டில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் அளவை எட்டியுள்ளது.

தகிக்கும் வெப்பம்
கோடை காலத்தில் அவ்வப்போது மழை லேசாய் எட்டிப்பார்க்கும். ஆனால் இம்முறை அதற்கும் வழியின்றி, வெப்பம் கொளுத்துகிறது. சென்னை தொடங்கி சேலம், வேலூர், மதுரை என பல மாவட்டங்களில் 100டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளதால் மக்கள் புழுக்கத்தில் தவிக்கின்றனர்.

சுட்டெரிக்கும் சூரியன்
காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரைக்கும் கொளுத்தும் வெப்பத்தினால் வெளியே தலைகாட்டவே மக்கள் அஞ்சிவருகின்றனர். இந்த நிலையில் கொசு உற்பத்தியும் வெயிலுக்கு அதிகரித்து வருவது அச்சத்தை அதிகரித்துள்ளது.

நடமாடும் வெடிகுண்டுகள்
உலக அளவில் கொசுக்கள் போன்ற பூச்சிகளால் பரவும் நோய் களின் அச்சுறுத்தல் அதிகம் உள்ளது. நடமாடும் வெடிகுண்டாகவே கொசுக்கள் உள்ளன என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை அதிகரிப்பு
பருவநிலை மாற்றத்தால் இந்தியா போன்ற அதிக வெப்ப நாடுகளில் வெப்பநிலை 0.521 டிகிரி அதிகரித் துள்ளது. தமிழகத்தில் 1 டிகிரி வரை அதிகமாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. கொசுக்களின் முட்டை பொறிந்து அது கொசுவாக மாறுவதற்கு சுமார் 15 நாட்கள் ஆகும்.

கொசு உற்பத்தி அதிகரிப்பு
ஆனால், இப்போது அதிகரித்துள்ள வெப்ப நிலையால் கொசுக்களின் முட்டைகள் வேகமாக பொறிந்து 7 நாட்களிலேயே கொசு வாக மாறிவிடுகின்றன. இதனால், கொசுக்களின் உற் பத்தி அதிகரித்துள்ளது.

அதிகரிக்கும் நோய்கள்
மக்கள் கொசுக்கடியால் அவதிப்படுவதோடு மட்டுமல்லாது, பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே, கொசுக் களின் உற்பத்தியை தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும்.

மலேரியா தாக்குதல்
தமிழகத்தில் கிராமப் புறங்களை விட, நகர்ப் புறங்களில் வசிப்பவர்களே மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர். வடகிழக்கு மாநிலமான அசாம், மேகாலயா, நாகாலாந்து போன்ற பகுதியில் மலேரியாவால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம்.

பரவும் மலேரியா
அவர்கள் வேலை நிமித்த மாகவும் சிகிச்சைக்காகவும் தமிழகம் வருகின்றனர். அவர்களை கடிக்கின்ற கொசுக்கள், மற்றவர் களையும் கடிக்கிறது. அதன் மூலம், அவர்களிடமிருந்து மற்றவர் களுக்கும் மலேரியா பரவுகிறது. இதனை அரசு தீவிரமாக கண் காணிக்க வேண்டும்.

டெங்கு, சிக்குன்குனியா
டெங்கு, சிக்குன்குனியா மீண்டும் பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. டெங்கு காய்ச்சல்தானா என்பதை கண்டுபிடிப்பதற்கு முன்பே உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப் புள்ளது. எனவே, காய்ச் சலுடன் வருபவர்களுக்கு டெங்கு காய்ச்சலுக் கான சிகிச்சையை கொடுக்க வேண் டும்.

மூளைக்காய்ச்சல்
மூளைக் காய்ச்சலுக்கு தடுப்பூசி இருப்பதால், மூளைக் காய்ச்சலை எளிதாக தடுத்துவிடலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications