For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கள்ளத்தொடர்பு, 3 பெண்களுடன் ஜல்சா: தள்ளாடும் வயதில் என்.டி. திவாரியின் 'திடுக்' சர்ச்சைகள்

By Siva
Google Oneindia Tamil News

லக்னோ: முன்னாள் ஆந்திர மாநில ஆளுநர் என்.டி. திவாரி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர்.

முன்னாள் உத்தர பிரதேச மாநில முதல்வர் மூத்த காங்கிரஸ் தலைவரான என்.டி. திவாரி(88). அவர் ஆந்திர மாநில ஆளுநராக பதவி வகித்த காலம் முதல் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கினார்.

அப்படி அவர் சிக்கிய சர்ச்சைகள் பற்றி பார்ப்போம்.

மகன்

மகன்

என்.டி. திவாரி ஆந்திர மாநில ஆளுநராக இருந்தபோது கடந்த 2008ம் ஆண்டு ரோஹித் சேகர் என்ற வாலிபர் திவாரி தான் தனது தந்தை என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கள்ளத்தொடர்பு

கள்ளத்தொடர்பு

ஏற்கனவே திருமணமான திவாரிக்கு உஜ்வாலா ஷர்மா என்ற பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பில் பிறந்தவர் தான் ரோஹித் சேகர். ஆனால் திவாரி ரோஹித் தனது மகனே இல்லை என்று தெரிவித்தார்.

வீடியோ

வீடியோ

ஆளுநர் மாளிகையில் தள்ளாடும் வயதில் திவாரி படுக்கையில் 3 பெண்களுடன் உல்லாசகமாக இருந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மரபணு

மரபணு

அடம்பிடித்த திவாரியிடம் வலுக்கட்டாயமாக மரபணு சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவில் ரோஹித் திவாரியின் மகன் என்பது உறுதியானது. ஆனால் சோதனை முடிவை திவாரி ஏற்க மறுத்தார்.

ஒப்புதல்

ஒப்புதல்

உஜ்வாலாவுடன் தனக்கு எந்த உறவும் இல்லை என்று கூறி வந்த திவாரி ரோஹித் தனது மகன் என்பதை ஒரு வழியாக ஒப்புக் கொண்டார்.

தர்ணா

தர்ணா

ரோஹித்தை திவாரி தனது மகன் என்று ஒப்புக் கொண்ட பிறகு அவரது வீட்டுக்குள் நுழைய உஜ்வாலாவுக்கு அனுமதி மறுத்தார். இதையடுத்து திவாரியின் வீடு முன்பு உஜ்வாலா தர்ணா போராட்டம் நடத்தினார்.

டான்ஸ்

டான்ஸ்

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் போரில் மறைந்த வீரர்களின் நினைவாக நடந்த விழாவில் திவாரி கலந்து கொண்டார். நடக்க முடியாமல் இருவரின் துணையோடு தள்ளாடித் தள்ளாடி வந்த அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண்ணின் தோளில் கையை போட்டுக் கொண்டு நடனம் ஆடியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

English summary
Veteran congress leader ND Tiwari found himself in a lot of controversies. Above is the list of them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X