வீட்டைப் பூட்டிக்கொண்டு 4 ஆண்டுகளாக வசித்த தாய், மகள் மீட்பு
டெல்லியில் 4 வருடமாக பூட்டிய வீட்டில் வசித்து வந்த தாய், மற்றும் மகளை காவல்துறையினர் மீடடு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
டெல்லி: டெல்லியில் வீட்டைப் பூட்டிக்கொண்டு 4 ஆண்டுகளாக உள்ளே வாழ்ந்து வந்த தாய், மகளை போலீசார் மீட்டனர்.
டெல்லி மஹாவீர் எல்கலேவ் பகுதியில் வீடு ஒன்றில் 2 பெண்கள் மிக நீண்ட நாட்களாக வீட்டை பூட்டிகொண்டு உள்ளே இருப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், முதல் மாடியில் உள்ளே பூட்டப்பட்டிருந்த அறைக் கதவை உடைத்துப் பார்த்தபோது, அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், கலாவதி என்ற 42 வயது பெண்ணும், 20 வயதான அவரது மகள் தீபாவும் இருந்தனர்.
இதையடுத்து, கீழ் வீட்டில் வசித்த கலாவதியின் மாமனார் மஹாவீர் மிஸ்ராவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகன் இருவரும் சாலை விபத்தில் இறந்துவிட்டதாகவும், அதில் மனநலம் பாதிக்கப்பட்ட மருமகள் மற்றும் பேத்தி ஆகிய இருவரும் அறையை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருப்பதாக தெரிவித்தார்.
இருவரும் நாள் ஒன்றுக்கு ஒருமுறை மட்டுமே உணவு கேட்பதாகவும், மற்ற நேரங்களில் அறையை அடைத்துக் கொண்டு உள்ளேயே இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, தாய், மகள் இருவரையும் மீட்ட போலீசார், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications