Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த வருஷம்தான் கல்யாணம்! தசராவுக்கு 125 உணவுகளை பரிமாறி அசத்திய மாமியார்.. திணறிய "மாப்பிள்ளை"

Subscribe to Oneindia Tamil

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் வருங்கால மருமகனுக்காக 125 உணவு வகைகளை விருந்தாக வைத்து மாமியார் ஒருவர் அசத்தியுள்ளார்.

ஒவ்வொருவரின் குணநலன்களை அவர்களது நடை, உடை , பாவனை, பேச்சாற்றல், நடந்து கொள்ளும் விதம், பார்வை உள்ளிட்டவற்றை வைத்து ஒருவரது கேரக்டரை கண்டறியலாம்.

அது போல் ஒருவரது வீட்டிற்கு சென்றால் அவர்கள் கொடுக்கும் விருந்தோம்பல் மூலம் அவர்களின் குடும்ப பழக்கத்தையும் பண்பாட்டையும் மனித நேயத்தையும் அறிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு விருந்தோம்பல் என்பது இன்றியமையாதது.

 கலாச்சாரம்

கலாச்சாரம்

தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியத்தில் முக்கியமானது விருந்தோம்பல் என சொல்லலாம். இதற்காக தற்போது தனியார் கோர்ஸ்கள் எல்லாம் வந்துவிட்ட அளவுக்கு இளைஞர்கள் மத்தியில் விருந்தோம்பல் குறைந்துவிட்டதாகவே சொல்லப்படுகிறது.

 நல்லவரா கெட்டவரா

நல்லவரா கெட்டவரா

நல்லவரோ கெட்டவரோ, நண்பரோ எதிரியோ, தெரிந்தவரோ தெரியாதவரோ வீட்டுக்கு வருபவரை வாங்க என வாய் நிறைய அழைத்து அவர்களை அமர வைத்து முதலில் அவர்கள் களைப்பை போக்கும் வகையில் தண்ணீர் கொடுக்க வேண்டும். பிறகு தேனீர், காபி, ஜூஸ், மோர் உள்ளிட்ட நீராகாரங்களை கொடுக்கலாம்.

உணவு வகைகள்

உணவு வகைகள்

அதன் பிறகு அவர்கள் வந்த நேரத்தை பொருத்து உணவு சாப்பிட வைத்துத்தான் அனுப்ப வேண்டும். அவரவர் வசதிக்கேற்ப உணவு வகைகளை பரிமாற வேண்டும். உணவு வகைகள் என்றால் தடபுடலாகத்தான் என்றில்லை, கூழை கொடுத்தாலும் அதை அன்பாக கொடுக்க வேண்டும். அந்த உபசரிப்பிலேயே விருந்தினருக்கு வயிறு நிரம்பிவிடும்.

விரும்தோம்பல்

விரும்தோம்பல்

யாரோ ஒருவருக்கே இப்படி விருந்தோம்பல் செய்ய வேண்டும் என்றால், வீட்டு மாப்பிள்ளைக்கோ இல்லை வருங்கால மாப்பிள்ளைக்கோ என்றால் கேட்கவா வேண்டும். அந்த வகையில் ஆந்திர பிரதேசத்தில் விசாகப்பட்டினத்தில் வருங்கால மருமகனுக்காக மாமியார் 125 உணவு வகைகளை விருந்தாக கொடுத்து அசத்தியுள்ளார்.

 ஆந்திராவில் திருமணம்

ஆந்திராவில் திருமணம்

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் எஸ் கோட்டா பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா- சுப்புலட்சுமி தம்பதி. இவர்களது ஒரே மகன் சைதன்யா. இவருக்கும் விசாகப்பட்டினம் ஸ்ரீநிவாச ராவ்- தனலட்சுமியின் மகள் நிஹாரிக்காவுக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 9ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தசரா பண்டிகைக்கு வருமாறு வருங்கால மாப்பிள்ளையை பெண் வீட்டார் தங்களது வீட்டிற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதை ஏற்ற மாப்பிள்ளையும் பெண் வீட்டிற்கு வந்தார்.

விருந்து சாப்பிட அழைப்பு

விருந்து சாப்பிட அழைப்பு

அவரை விருந்து சாப்பிட உட்கார வைத்தனர். தலைவாழை இலையை விரித்து அதில் தண்ணீர் தெளித்து ஒவ்வொரு உணவாக பரிமாறினார் மாமியார். இதில் எதை முன்பு சாப்பிடுவது எதை பின்பு சாப்பிடுவது என தெரியாமல் சைதன்யா திக்குமுக்காடினார். ஏனென்றால் 125 வகையான உணவுகள் என்றால் சும்மாவா?

திணறிய மருமகன்

திணறிய மருமகன்

ஒரு கட்டத்தில் தன்னால் சாப்பிட முடியாமல் சைதன்யா தனது மாமியாரிடம் நிலைமையை சொல்லிவிட்டு பாதியிலேயே எழுந்துவிட்டார். இதில் பரிமாறப்பட்ட பலகாரங்களின் பெயர் கூட சைதன்யாவுக்கு தெரியாதாம். ஆனால் மாமியாரின் கைப்பக்குவம் நன்றாக இருந்தது என பாராட்டினாராம். மாமியாரின் கைப்பக்குவம் மகளுக்கும் இருக்குமா என்று சைதன்யா நினைத்திருக்கலாம். அதே போல் வருங்கால மாப்பிள்ளைக்கே 125 உணவு வகைகள் என்றால் மார்ச் 9 ஆம் தேதிக்கு பிறகு எத்தனை உணவு வகைகளோ மாப்பிள்ளை திணற போகிறார் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். இன்னும் சிலர்... சைதன்யா யோகக்காரன் என கமென்ட் போடுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+