ரத்த காயத்துடன் துடித்த தலித் -உள்ளாடை கிழித்து “மதம்” தேடிய மிருகங்கள்! அடுத்து போலீஸ் செய்த கொடுமை
போபால்: மத்திய பிரதேச திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக தலித் நபரை பிடித்து தாக்கிய கும்பல் அவரது மதம் என்னவென்று தெரிந்துகொள்வதற்காக உள்ளாடையை கிழித்த நிலையில் தாக்கப்பட்டவரை போலீஸ் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டம் கஸ்ராவாட் அருகே அமைந்து உள்ளது நிம்ரானி கிராமம்.
தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இப்பகுதியில் திருட்டு குற்றத்தில் ஈடுபட்டதாக கூறி அப்பகுதி மக்கள் தலித் இளைஞரை பிடித்து உள்ளனர்.

மதம் தேடிய மிருகங்கள்
அவரை கொடூரமாக கும்பலாக சேர்ந்து தாக்கும் அந்த கும்பல், அவரது மதம் என்னவென்று தெரிந்துகொள்வதற்காக அவர் அணிந்திருந்த மேலாடைகள் மற்றும் உள்ளாடையை கிழித்தனர். இரத்த காயங்களுடன் தாக்கப்பட்ட இளைஞர் துடித்துக் கொண்டிருக்க, உள்ளாடையை கிழித்து பார்த்து, இவர் இந்துதான் என்று கும்பலை சேர்ந்த ஒரு நபர் கூச்சலிட்டார்.

வீடியோ
அதன் பின்னர் அவரை கட்டி வைத்து அனைவரும் கொடூரமாக தாக்கி இருக்கின்றனர். அங்குள்ள நபர் ஒருவர் பதிவு செய்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தலித் இளைஞரை தாக்கிய கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மத்திய பிரதேச போலீஸ்
ஆனால் நிஜத்தில் நடந்தது பெரும் கொடுமை. மத்திய பிரதேசத்தில் கல்டங்கா காவல்நிலைய போலீசார் கும்பல் தாக்குதலுக்கு உள்ளான தலித் இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்து இருக்கின்றனர். காவல்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கைக்கு எதிராக கார்கோன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தம்வீர் சிங்கிற்கு புகார் பறந்தது.

எஸ்.பி. நோட்டீஸ்
இதனை அறிந்த காவல் கண்காணிப்பாளர் தம்வீர் சிங், கல்டங்கா காவல் நிலைய பொறுப்பாளரான ராஜேந்திர சிங் பாகெலுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அதில், "இந்த தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்யாததற்கும், விசாரணை செய்யாமல் தாக்கப்பட்டவரை சிறையில் அடைத்தது குறித்து விளக்கமளிக்க அவர் உத்தரவிட்டு உள்ளார்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications