லோக்சபா தேர்தல்: "முகேஷ் அம்பானிக்கு பாஜக, காங் ஆதரவு" முக்கிய பிரச்சனையாக உருவெடுக்கிறது?
டெல்லி: முகேஷ் அம்பானியை காங்கிரஸும் பாஜகவும் கை கோர்த்து ஆதரித்து வருவது லோக்சபா தேர்தலில் முதன்மை பிரச்சனையாக உருவெடுக்கக் கூடும் எனத் தெரிகிறது.
டெல்லி மாநில சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்படவிருந்த ஜன் லோக்பால் மசோதா, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது.

இம்மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனால் பதவி விலகப்போவதாக ஏற்கனவே கேஜ்ரிவால் தெரிவித்திருந்தார். அதன்படி மசோதா நிறைவேற்ற முடியாமல் போனதால் நேற்று இரவு தனது அமைச்சரவையை கூட்டி பதவி விலகுவது என்ற முடிவை அவர் எடுத்தார்.
பின்னர் தொண்டர்கள் முன் உரையாற்றிய கேஜ்ரிவால், முகேஷ் அம்பானியை காப்பாற்றுவதற்காகவே காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுத்துவிட்டதாக கடுமையாக சாடினார்.
மேலும் காங்கிரஸ் கட்சியானது தனது கடை என்றும் அந்த கடையில் எதை வேண்டுமானாலும் தன்னால் பெற்றுக்கொள்ளமுடியும் என்று முன்னொரு சமயம் அம்பானி கூறியதை மேற்கோள் காட்டிய அவர் கடந்த 10 வருடங்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை அம்பானி தான் இயக்கி வருவதாக கூறினார்.
அதே சமயத்தில் மோடியை பின்னால் இருந்து இயக்குவதே முகேஷ் அம்பானிதான் என்றும் அப்படியில்லையென்றால் மோடிக்கு ஏராளமான பணம் எங்கிருந்து கிடைக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார்.
1970களில் இந்திரா காந்தி, எதிர்க்கட்சிகள் அனைத்தும் தொழிலதிபர்களின் தரகர்களாக செயல்படுகின்றன என்று சாடியிருந்தார். அதை நினைவூட்டுவது போலவே கேஜ்ரிவாலின் "முகேஷ் அம்பானியும் பாஜக- காங்கிரஸ்" பேச்சும் தேர்தல் முழக்கமாக உருவெடுக்க கூடும் போல் தெரிகிறது.
நிச்சயமாக லோக்சபா தேர்தலில் மூன்றாவது அணி மற்றும் ஆம் ஆத்மியால் முகேஷ் அம்பானி மற்றும் பாஜக- காங்கிரஸ் உறவு விவகாரம் சூறாவளியாக உருவெடுக்கும் என்றே கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications