For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முஸ்லிம்களை கொலை செய்துவிட்டு மன்னிப்பு கேட்கிறது பாஜக- முலாயம் சிங் சாடல்

By Mathi
Google Oneindia Tamil News

அலகாபாத்: அப்பாவி முஸ்லிம்களை கொலை செய்துவிட்டு பாரதிய ஜனதா கட்சி மன்னிப்பு கேட்கிறது என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் விமர்சித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் பேசியதாவது:

லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு வேட்பாளர் இல்லை. அவர்கள் காங்கிரஸ் கட்சியை தடுக்க பார்க்கின்றனர். குஜராத்தில் கலவரம் நடந்த பொது படுகொலைகளை தடுக்க அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி தடுக்க தவறிவிட்டார்.

Mulayam slams Modi, accuses him of inaction during 2002 Gujarat riots

முதலில் முஸ்லிம் சமூக மக்களை கொலை செய்துவிட்டு பின்னர் மன்னிப்பு கேட்கிறது பாரதிய ஜனதா கட்சி. குஜராத் கலவரம் எப்போது நடந்ததோ. அப்போது நான் அங்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் சென்றேன். அது என்னுடையை தைரியத்தை வெளிபடுத்தியது

இஸ்லாமியர்களுக்கு அநியாயம் அளிக்கப்படுவதை சாஜ்வாடி கட்சி பொறுத்துக் கொள்ளாது.

இவ்வாறு முலாயம்சிங் பேசினார்.

English summary
Samajwadi Party supremo Mulayam Singh Yadav on Sunday launched a vitriolic attack on the Bharatiya Janata Party prime ministerial nominee Narendra Modi, accusing him of inaction during the 2002 Gujarat riots and saying his dream of becoming the prime minister of this country would not come true.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X