முல்லைப் பெரியாறு: அதிகாரிகளை கேரளா தடுப்பதற்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிட செல்லும் அதிகாரிகளை கேரளா தடுப்பதற்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரை தேக்கி வைப்பது தொடர்பாக தமிழகம்-கேரளா இடையே பிரச்சனை இருந்து வருகிறது.
இது தொடர்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை கொடுத்தது. அதன் பேரில் முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளதாகவும் எனவே அணையில் 142 அடி உயரம் வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கேரளா மனு தள்ளுபடி
கேரள மாநில அரசு அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது. அது தள்ளுபடி செய்யப்பட்டது.

கேரளா தாக்குதல்
இதையடுத்து முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியது. ஆனால் கேரள போலீசார் தமிழக அதிகாரிகளை தடுத்ததோடு தாக்கவும் முயன்றனர்.

மத்திய படை கோரிக்கை
இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு மத்தியப்படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதற்கு கேரள மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

கேரளா போலீஸ் போதுமே..
அந்த மனுவில், முல்லைப் பெரியாறு அணைக்கு மத்தியப்படை பாதுகாப்பு தேவை இல்லை. கேரள போலீஸ் உரிய பாதுகாப்பு வழங்கும் என்று கூறி இருந்தது.

தமிழக அரசு புது மனு
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று புதிய பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் கூறி இருப்பதாவது:

தடுக்க கூடாது
முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் எந்தவித தடையும், இடையூறும் இல்லாமல் சென்று வர அனுமதிக்க வேண்டும். அணைக்கு செல்லும் தமிழக அதிகாரிகளை தடுக்கக் கூடாது என்று கேரள மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

தடை விதிக்க வேண்டும்
சோதனை என்ற பெயரில் தமிழக அதிகாரிகளிடம் கேரள போலீசார் அத்துமீறி நடந்து கொள்கிறார்கள். எனவே அதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு தமிழக அரசின் புதிய மனுவில் கூறப்பட்டுள்ளது
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications