மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் கட்டணம் விமான கட்டணத்தைவிட குறைவு: அமைச்சர் தகவல்
மும்பை: மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பை முதல் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர் வரையிலான அதிவேக புல்லட் ரயிலின் டிக்கெட் கட்டணம் விமான கட்டணத்தை விட குறைவாக இருக்கப்போகிறது என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
லோக்சபா கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து அவர் கூறியது: 508 கி.மீ தொலைவு கொண்ட மும்பை-அகமதாபாத் தூரத்தை புல்லட் ரயில் 2 மணி நேரங்களில் கடந்துவிடும். அதிகபட்சமாக 350 கி.மீ வேகத்தில் ரயில் பயணிக்க முடியும் என்றாலும், 320 கி.மீ வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது 7 மணி நேரம்
தற்போதைய நிலையில் இவ்விரு நகரங்களையும் இணைக்கும் அதிவேக ரயில் தூரந்தோ எக்ஸ்பிரஸ். இது 7 மணி நேரத்தில் இந்த தூரத்தை கடக்கிறது.

7 வருடங்களில் நிறைவு
இந்த ரயில் திட்டத்திற்கு ரூ.97636 கோடி செலவாகும். இரு நகரங்களும் வர்த்தக ரீதியில் முக்கியமானவை என்பதால் புல்லட் ரயில் திட்டம் அவசியமாகிறது. 2023-24ம் ஆண்டுக்குள் புல்லட் ரயில் திட்டம் நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம். விமான கட்டணத்தைவிட இந்த ரயில் கட்டண் குறைவாக இருக்கும்.

சென்னை-மும்பை வழித்தடம் ஆய்வு
மும்பை-சென்னை, மும்பை-நாக்பூர், டெல்லி-கொல்கத்தா வழித்தடங்களில் இதுபோன்ற புல்லட் ரயில் பாதைகளை அமைப்பது பற்றி ஆய்வு நடத்தப்படும்.

சென்னை-பெங்களூர் நடுவே செமி புல்லட்
டெல்லி-சண்டீகர், சென்னை-பெங்களூர்-மைசூர், டெல்லி-கான்பூர், நாக்பூர்-பிலாஸ்பூர், மும்பை-கோவா, மும்பை-அகமதாபாத், சென்னை-ஹைதராபாத், நாக்பூர்-செகந்திராபாத் நகரங்கள் நடுவே செமி-புல்லட் ரயில் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications