8 வாட்ச்மேன்... ஒரு மணி நேர டைம்.. 11 கடைகளில் ஆட்டையைப் போட்ட திருடன்...!

இவனது திருட்டு முயற்சிகளை யாருமே காண முடியாமல் போனது ஆச்சரியம்தான். அதேசமயம், சிசிடிவியில் இவன் தெள்ளத் தெளிவாக பதிவாகி விட்டதால், சீக்கிரமே இவனைப் பிடித்து விடுவோம் என்று கூறியுள்ளது மும்பை போலீஸ்.
கட்கோபர் குதியில் செவ்வாய்க்கிழமை இரவுதான் இந்த தொடர் திருட்டு நடந்தது. அங்குள்ள கனரா விற்பனை மையத்தின் 11 கடைகளுக்குள் அடுத்தடுத்து நுழைந்து திருடியுள்ளான் இந்த அடையாளம் தெரியாத நபர்.
மொத்தம் ஒரு மணி நேரம் இவன் பல்வேறு கடைகளுக்குள் வாசம் புரிந்துள்ளான். 8 வாட்ச்மேன்களை ஏமாற்றியுள்ளான்.
எந்தவிதமான பதட்டமோ, டென்ஷனோ, கவலையோ இல்லாமல் படு நிதானமாக ஒவ்வொரு இடத்திலும் பணத்தையும், பொருட்களையும் இவன் திருடியுள்ளான்.
சில கடைகளில் இரும்பு கிரில் கேட்டுகள் போடப்பட்டிருந்தன. அதையும் கூட இவன் லாவகமாக உடைத்து உள்ளே புகுந்துள்ளான். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸில் வழக்குப் பதிவாகியுள்ளது. சிசிடியிவில் பதிவாகியுள்ள உருவத்தை வைத்து இவனைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர்.
இவனது திருட்டுத்தனத்தால் மொத்தம் ரூ. ஒன்றரை லட்சம் வரை திருடு போயுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications