வறட்சியால் வாடியிருந்த மும்பையில் கொட்டியது மழை.. 2 நாளில் பருவமழை கால் வைக்கிறது
மும்பை: வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த மும்பையில் முன் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் வெப்பம் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஆண்டு பருமழை பொய்த்துப்போனது. இதனால் கடும் வறட்சி நிலவுகிறது. கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை கூட மும்பை மற்றும் புனே ஆகிய இரு நகரங்களிலும் நடத்த முடியாமல் போகும் அளவுக்கு வறட்சி அங்கு தலை விரித்து ஆடியது.
Morning View #MumbaiRains !! pic.twitter.com/Mqul74vAMV
— Rohit Kumar (@AsliRohitKumar) June 11, 2016
இந்நிலையில், மும்பை மக்கள் நேற்று மாலை முதல் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். நேற்று மாலையில் லேசான மழை பெய்த நிலையில், இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இது முன் பருவமழை என்று கூறுகிறது வானிலை இலாகா.
தென் மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதிவாக்கில் கேரளாவில் கால் வைப்பது வழக்கம். ஆனால், இவ்வாண்டு ஒரு வாரம் தாமதமாகவே கேரளாவில் தென் மேற்கு பருவமழை கால் வைத்தது. இதனால் மும்பைக்கு அந்த மழை வந்து சேர மேலும் இரு நாட்கள் ஆகும் என்கிறது வானிலை இலாகா.
Well begun weekend. #delhirains #MumbaiRains make an appearance pic.twitter.com/CRwxAfetR3
— Surbhi Goel (@surbhig2701) June 11, 2016
கடந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி மும்பையில் மழை காலம் தொடங்கியதாம். இம்முறையும், நாளை அல்லது நாளை மறுநாள் பருவமழை மும்பையில் கால்பதிக்க வாய்ப்புள்ளது. இவ்வாண்டு பருமழை கடந்த ஆண்டை ஒப்பிட்டால் அதிகமாக பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு துறை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மழை பெய்துவருவதை மகிழ்ச்சியோடு டிவிட்டர் போன்ற சமூக தளங்களில் பதிவிட்டுவருகிறார்கள் மும்பைகர்ஸ்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications