For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பையில் கடும் மழைதான்.. அதற்காக இப்படியா பொய்யான தகவலை பரப்புவது? #MumbaiRains

மும்பையில் கடும் மழை பெய்து வருவதால் தாழ்வான இடங்களில் 2 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் இந்த சோதனையான காலத்திலும் சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் கனமழை பெய்து வரும் நிலையில், தகவல் பெட்டகமான சமூக வலைதளங்களை சிலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.

ஒரு காலத்தில் செல்போன் இருப்பதால் பெரும்பாலானோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் ஏராளமாக உள்ளதால், இதன் மூலம் நொடி பொழுதை காட்டிலும் மிக குறைந்த கால இடைவெளியில் கருத்துகள் பரிமாறப்படுகின்ரன.

அவற்றுள் பொதுவாக நல்ல கருத்துகளும் இட்டுகட்டப்பட்ட கருத்துகளும் இருப்பது சகஜம்தான். ஆனால் இக்கட்டான சூழல்களில் மக்களுக்கு பீதியை கிளப்பும் வகையிலான தவறான தகவல்களை பரப்புவதும் அதிகரித்து விட்டது.

அதன்படி, மும்பையில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மும்பையின் நிலை குறித்து சமூக வலைதளங்களில் ஒரு ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. அதில் பேஷன் ஷோவில் கலந்து கொள்ளும் பெண் ஒருவர் தன் உடைகள் நாசமாகிவிடக் கூடாது என்பதற்காக வானில் கயிற்றின் மூலம் தொங்கிக் கொண்டு செல்வதை போல் படம் அனுப்பப்பட்டுள்ளது.

இது முழுக்க முழுக்க தவறான தகவலாகும். இதுபோன்ற படங்களால் மக்களுக்கு பீதி ஏற்படும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். தொழில்நுட்பங்களை நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

English summary
Mumbai witnesses heavy rain from yesterday. Waterlogged in most of the places. On using this situation some are giving false news and spreading false information through Social medias.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X