மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளிகளின் தண்டனை விவரம்... மீண்டும் ஒத்திவைப்பு
மும்பை : 2006 ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மும்பையில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரயில்களில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 188 பேர் பலியானார்கள். இந்த வழக்கில் 12 பேரை குற்றவாளிகளாக மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் அறிவித்தது.

அவர்களுக்கான தண்டனை விபரங்கள் கடந்த 14-ந் தேதி அறிவிக்கப்படுவதாக இருந்த நிலையில் நீதிபதி யாதின் டி ஷின்டே தண்டனை விபரங்கள் நேற்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று இது தொடர்பான விசாரணை நடைபெற்றபோது குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் தூக்கு தண்டனை அளிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தண்டனை விவரங்களை அளிப்பதை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதி ஷின்டே ஒத்திவைத்தார்.
இவர்களது தண்டனை விபரம் குறித்த அறிவிப்பு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications