Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிஞ்சு குழந்தைனு கூட பார்க்கலையே! சீரழித்துக் கொலை செய்த காதலன்.. கைகட்டி வேடிக்கை பார்த்த தாய்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை மட்டுமல்லாது இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது இந்த சம்பவம். இரண்டு வயது பச்சிளம் குழந்தையை 19 வயது இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கிறான் அதுவும் தாயின் கண் முன்னே.. 30 வயதான பெண்ணும், 19 வயதான அந்த பெண்ணின் காதலனும் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய அளவில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 18 வயது உட்பட்ட சிறுமிகள் அதிக அளவில் இதுபோன்ற கொடூர சம்பவங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக மகாராஷ்டிரா, பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகம் நடப்பதும் இந்த மாநிலங்களில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அரிதினும் அரிதாக கொடூரமான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

Mumbai crime pocso

இரண்டு வயது குழந்தையை அவரது தாயின் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்திருக்கிறான் அந்தப் பெண்ணின் கள்ளக்காதலன். மல்வானி பகுதியில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 30 வயதான பெண் ஒருவர் தனது குழந்தையின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு வந்து தனது மகளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்து விட்டதாக கூறியிருக்கிறார். தொடர்ந்து பரிசோதித்த போது அந்த சிறுமி இறந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து மருத்துவர் குழந்தையின் உடலை பரிசோதித்த போது குழந்தை மூச்சு திணறி இறந்ததும், சிறுமியின் அந்தரங்க உடல் பகுதிகளில் காயங்களும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான தடயங்களும் இருப்பதை கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து போலீசுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதை அடுத்து அங்கு வந்த போலீசார் சிறுமியின் தாய் மற்றும் அவரது 19 வயதான காதலனை பிடித்து விசாரித்தனர்.

அப்போது சிறுமியின் பாட்டி இல்லாத நேரத்தில் அந்த கொடூரன் தாயின் கண் முன்னே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதனை தாயும் வேடிக்கை பார்த்திருக்கிறார். தொடர்ந்து தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை தாயும் ஒப்புக்கொண்டுள்ளார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும் என தனது காதலன் கேட்டதாகவும், முதலில் மறுத்த போதும் பின்பு அவர் வற்புறுத்தி கேட்டதால் என் மகளிடம் பாலியல் ரீதியாக நடந்து கொள்ள அனுமதித்தேன். அந்த குழந்தையை பார்த்துக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை என கூறி அதிர வைத்திருக்கிறார் தாய்.

தொடர்ந்து இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இருவர் மீதும் கொலை, பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களை அழித்தல், திட்டமிட்டு குற்றம் செய்தல் மற்றும் போக்சோ சட்டம் உள்ளிட்ட கடுமையான குற்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

உயிரிழந்த குழந்தையை அவரது பாட்டி தான் வளர்த்து வந்திருக்கிறார். வீட்டு வேலை செய்து மாதம் 3000 ரூபாய் சம்பளம் பெற்று தனது மகளையும் பேத்தியையும் வளர்த்ததாக கூறப்படுகிறது. 30 வயது பெண் கர்ப்பமாக இருந்தபோது அவரது கணவர் விட்டு சென்றதால் மகளையும் பேத்தியையும் அந்த மூதாட்டி தான் வளர்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில் தான் அருகில் வசிக்கும் 19 வயது இளைஞர் உடன் அந்த பெண்ணுக்கு முறையற்ற உறவு ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து இருவரும் பழகிய நிலையில் இருவரும் தனிமையில் இருந்திருக்கின்றனர். அப்போதுதான் சிறுமியை வன்கொடுமை செய்ய வேண்டும் என்ற விபரீத எண்ணம் அந்த இளைஞனுக்கு வந்ததாகவும், அதற்கு தாயே ஒப்புக்கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+