குடும்ப மானம் போச்சு! பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கொடூர கொலை! அதிர்ந்து போன போலீஸ்! ஷாக் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

போபால் : மத்திய பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி தன் வீட்டில் இருந்ததால் கிராமத்தினர் அவதூறாக பேசியதாகக் கூறி அவரது தாய் மாமனே விஷம் வைத்து கொலை செய்த கொடூர சம்பவம் போலீசாரையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியை அவரது தாய் மாமாவும் அவரது மகனும் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை அரங்கேறியிருக்கிறது.

இது குறித்து பிரபல ஆங்கில பத்திரிகையான ஹிந்துஸ்தான் டைம்ஸில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, இந்த மாத தொடக்கத்தில் அதே கிராமத்தில் வசிக்கும் நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மைனர் சிறுமி, அவளது மாமா மற்றும் உறவினரால் விஷம் உட்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

இதுகுறித்து உயிரிழந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட சிறுமியின் தாய் மாமா மற்றும் 22 வயதுடைய மகன் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலை) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மே 21 அன்று கைது செய்யப்பட்டதாக காவல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மே 18 அன்று பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சிக்கிய தப்பித்த சிறுமி சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்துவிட்டதாக காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது

சிறுமி கொலை

சிறுமி கொலை

அந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அவளது தாய் மாமா காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். மே 20 அன்று, அவரது மகனிடம் விசாரணை நடத்திய போது சிறுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். விசாரணையின் போது பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி தன் வீட்டில் இருந்ததால் கிராமத்தில் உள்ள தனது குடும்பத்தை அவதூறாகப் பேசியதால் அவளைக் கொன்றதாக காவல்துறையினரிடம் கைது செய்யப்பட்டதாக கூறியதாக மூத்த காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

கொலைக்கு முன்பாக கொலையாளிகள் சிறுமியை விஷம் குடிக்கும்படி கட்டாயப்படுத்தி குடிக்க வைத்து கொலை செய்துள்ளனர். பின்னர் அதை தற்கொலை வழக்காக மாற்ற அவரது ஆடைகளை மாற்றி வீட்டில் படுக்க வைத்துள்ளது என்பது தெரியவந்துள்ளது மேலும் கொலையில் மற்ற குடும்ப உறுப்பினர்களின் பங்கு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மபியில் அதிர்ச்சி

மபியில் அதிர்ச்சி

அந்த சிறுமி 22 வயதுடைய ஒருவரால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கொரோனா காரணமாக தனது தாயார் இறந்த பிறகு சிறுமி ஒரு வருடத்திற்கு முன்பு தனது தாய் மாமா வீட்டிற்கு வந்துள்ளார் அப்போது. அதே கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான ஒருவர் அவரை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பின்னர் ராய்கர் பேருந்து நிலையத்தில் இருந்து சிறுமி மீட்கப்பட்ட நிலையில் தான் சிறுமி அவரது உறவினர்களாலேயே கொலை செய்யப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+