லிவிங் டூ கெதர், கோயிங் ஸ்டடி... நாகரீகம்னா 'முரியா' பழங்குடிகளின் 'இதை' என்னன்னு சொல்லுவீங்களாம்?
திருமணத்துக்கு முந்தைய உடலுறவை அனுமதிக்கிறது முரியா பழங்குடிகளின் வாழ்க்கை முறை.
Recommended Video

போபால்: லிவிங் டூ கெதர், கோயிங் ஸ்டடி போன்றவை வெளிநாட்டு நாகரிகம்...பெண்களின் பாலியல் சுதந்திரம் என பேசுகிறோம்...ஆனால் இந்தியாவின் முரியா பழங்குடி மக்கள் ஆயிரமாயிரமாண்டுகளாக கடைபிடித்து வரும் பாலியல் தொடர்பான நடைமுறை இந்த 'சோ கால்டு' நாகரிகங்களுக்கும் படுமுன்னோடி என்பது சுவாரசியமானது.
சத்தீஸ்கரின் தண்டகாருண்யா மலைகளில் முரியா பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் இன்றளவும் சிறுவர், சிறுமியர்களின் திருமணத்துக்கு முந்தைய தடையற்ற உடலுறவுக்கு வகை செய்யும் 'கோட்டுல்'களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

கோட்டுல்கள் என்பவை மாலை முதல் அதிகாலை வரை சிறுவர், சிறுமியர் ஒன்று கூடும் ஒரு குடியிருப்பு இடம். சிறுவர்களுக்கு 'செலி' என்றும் சிறுமிகளுக்கு மோட்டியாரி எனவும் பெயரிட்டுள்ளனர்.
முரியா பழங்குடிகள் 2 வகை கோட்டுல்களை கடைபிடித்தனர். ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் ஒருதாரமண அடிப்படையில் உறவு கொள்ள அனுமதிக்கப்பட்டு பின் திருமணம் செய்து வைக்கப்படுவர். விவகாரத்துக்கும் அனுமதி உண்டாம். ஆனால் கள்ளகாதல்களுக்கு கடும் தண்டனையும் இருக்கிறதாம்.

2-வது கோட்டுல்கள் என்பவை வேறு ஒரு ரகம். ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் ஓரிரு நாட்கள் மட்டும் உடலுறவு வைத்துக் கொள்ள முடியும். அதன் பின்னர் அந்த இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்படக் கூடாது. வேறு ஒருவரைத்தான் தேர்வு செய்ய வேண்டும்.
பொதுவாக மாலை நேரங்களில் கோட்டுல்களில் சிறுவர் சிறுமியர் ஒன்று கூடி நடனமாடுகின்றனர். அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கின்றனர். பின்னர் தாங்கள் விரும்புவரை தேர்வு செய்து உடலுறவு கொள்கின்றனர். விடிந்த பின்னர் அவரவர் பணிகளுக்கு திரும்புகின்றனர்.

முரியா பழங்குடிகளைப் பொறுத்தவரை உடலுறவு என்பதை ஒரு களைப்பு போக்கும் நிகழ்வாகத்தான் பார்க்கின்றனர். பின்னர் கருத்தரிக்கும் நிலையில் வேறு ஒருவருக்கு மணம் முடித்து வைக்கின்றனர்.
இந்த கோட்டுல்களை நாடு விடுதலைக்கு முன்னரே நேரில் சென்று ஆய்வு நடத்தி பதிவு செய்திருக்கிறார் மானுடவியல் அறிஞர் வெரியல் எல்வின் (எல்வின் கண்ட பழங்குடிகள்- புத்தகம்). இப்போதும் இந்த கோட்டுல்கள் பேசுபொருட்களாக இருக்கின்றன.
இப்ப சொல்லுங்க லிவிங் டூ கெதர், கோயிங் ஸ்டடி எல்லாம் எம்மாத்திரம்?
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications