Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வக்ஃப் சட்ட திருத்தம்.. பல நகரங்களில் வன்முறை வெடித்தது ஏன்? பாஜக, எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: வக்ஃப் சொத்துக்கள் சுரண்டப்படுவதை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கொண்டு வரப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த வக்ஃப் திருத்தச் சட்டம் 2025ஐ எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். முக்கியமாக இந்தியாவின் அடி ஆழத்தில் ஊன்றி இருக்கும் மத வேறுபாடுகளை, பிரச்சனைகளை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் இந்த சட்டம் அமைந்து உள்ளது. வக்ஃப் திருத்தச் சட்டம் 2025, மதச் சொத்து பரிவர்த்தனைகளில் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கான ஒரு துணிச்சலான நடவடிக்கை என்று பாஜகவினர் பாராட்டி வருகின்றனர்.

பெரும் பரபரப்பு.. எதிர்ப்புகளுக்கு இடையே வக்பு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்க வகை செய்யும் சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. 40 க்கும் மேற்பட்ட திருத்தங்களுடன், வக்ஃப் வாரியங்களை நிர்வகிக்கும் சட்டமான வக்ஃப் சட்டத்தில் உள்ள பல ஷரத்துகளை ரத்து செய்து சட்டம் திருத்தப்பட்டு உள்ளது. இஸ்லாமிய பெண்கள் மற்றும் முஸ்லீம் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது உட்பட, பல மாற்றங்களை இந்த சட்டத்தில் செய்துள்ளனர்.

wakf actsmamata

ஆனால் சமீபத்தில் இயற்றப்பட்ட இந்த வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல இந்திய நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. மேற்கு வங்காளத்தில் கடுமையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. அங்கே முர்ஷிதாபாத்தில் உள்ள இந்து குடும்பங்கள் குறிவைக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்பட்டன,

வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் கலவரம் ஏற்பட்டதால் அங்கே உள்ள மக்கள் பலர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கல்லெறிதல், தீ வைப்பு மற்றும் மக்களுக்கு வெளிப்படையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் வகையில் கலவரங்கள் நடத்தப்பட்டது. இதுவரை குறைந்தது 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் பதற்றம் இன்னும் குறையாமல் அதிகமாக உள்ளது.

அதிர்ச்சி தரும் வீடியோக்கள்

வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் முகமூடி அணிந்த நபர் ஒருவர்.. இந்துக்களை இழிவான வார்த்தைகளால் திட்டி.. நாங்கள் அதிகாரத்திற்கு வந்ததும்.. அவர்களை சும்மா விட மாட்டோம் என்று இந்துக்களை விமர்சிக்கும் வகையில் பேசி உள்ளார்.

மதவாதம் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டது , மாநில அரசு இதை தடுக்க தவறிவிட்டது, மக்கள் கடுமையான பிரச்சனையில் உள்ளனர் என்று பாஜக இதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. சுவேந்து அதிகாரி, சுகந்தா மஜும்தார், திலீப் கோஷ் மற்றும் நீதிபதியாக இருந்த எம்.பி., அபிஜித் கங்கோபாத்யாய் போன்ற மாநில பாஜக மூத்த தலைவர்கள் இதை கடுமையாக சாடி உள்ளனர். இந்துக்கள் வீடுகளை விட்டு விரட்டப்படும் போது, ​​திரிணாமுல் காங்கிரஸ் மவுனம் காக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

நாடு தழுவிய பதற்றம்

முர்ஷிதாபாத்தில் வன்முறை நடக்கும் அதே நேரத்தில் மற்ற பல நகரங்களிலும் இதேபோல் கலவரம் ஏற்பட்டது. ​​மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, பாட்னா, சில்சார், லக்னோ மற்றும் தமிழ்நாட்டின் ஓசூர் போன்ற நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன.

wakf actsmamata

ஹைதராபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள், முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்தச் சட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அசாமின் சில்சாரில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறியது. போராட்டத்திற்கு என்ற கும்பல் போலீசாருடன் மோதியது. இது பெரிய கலவரமாக மாறியது. டெல்லி ஜமா மசூதியில் நடந்த போராட்டங்கள் அமைதியாக நடந்தாலும் பல இடங்களில் கலவரம் வெடிக்கும் அபாயமும், பதற்றமும் நிலவி வந்தது.

பாஜகவின் நிலைப்பாடு: காங்கிரஸின் தவறுகளை களைதல்

வக்பு வாரியம் அரசியல் சாசனத்திற்கு மேலானது அல்ல என்று பாஜக தெளிவுபடுத்தியுள்ளது. நீண்ட காலமாக, வக்ஃப் சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, பதுக்கி வைக்கப்பட்டு, ஏழை முஸ்லிம்களிடமிருந்து-குறிப்பாக பாஸ்மாண்டா முஸ்லிம்களிடமிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டன. வாரியங்களின் 'தன்னிச்சையான' அதிகாரத்தை குறைக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதாவது வக்ஃப் வாரியங்களின் அளப்பரிய பலத்தை குறைக்கும் வகையில் இந்த திருத்தங்களை மேற்கொண்டு உள்ளனர். முக்கியமாக தற்போதுள்ள வக்ஃப் சட்டத்தின் படி வக்ஃப் வாரியம் எந்தவொரு சொத்தையும் சரிபார்க்காமல் உரிமை கோர முடியும். இந்த அதிகாரம் நீக்கப்பட்டு உள்ளது.

வக்ஃப் வாரியம் எந்தவொரு சொத்தையும் சரிபார்க்காமல் உரிமை கோர முடியாது. அதாவது முன்பு வக்ஃப் வாரியம் ஒரு நிலத்தின் வில்லங்க விவகாரங்களை, அந்த நிலத்தின் வரலாற்றை ஆராயாமல் அப்படியே உரிமை கோர முடியும். ஒரு நிலத்தை அவர்கள் உரிமை கோரினால்.. அதற்கு டாக்குமெண்ட் இல்லாத பட்சத்தில் வக்ஃப் வாரியம் அதை எடுத்துக்கொள்ள முடியும். இனி அப்படி செய்ய முடியாது.

எதிர்க்கட்சிகளின் போலித்தனம்: வாக்குகளுக்கு எரியூட்டும் நெருப்பா?

காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் ஏஐஎம்ஐஎம் ஆகியவை இந்தச் சட்டத்தை எதிர்த்துள்ளன. ஆனால், அதே கட்சிகள் சிலரின் பகிரங்கமான வெறுப்புப் பேச்சுக்களையும், தீவிரவாதிகளின் வன்முறையையும் கண்டிக்க மறுக்காமல் அமைதி காக்கின்றனர். இதற்காக போராட்டங்களை முன்னெடுக்கும் அவர்கள் மற்ற மக்கள் பிரச்சனையில் போராட்டங்களை மேற்கொள்வது இல்லை.

மம்தா பானர்ஜி ஒரு நவீன ஜின்னா - பாஜக தலைவர் தருண் சுக்

பாஜக தலைவர் தருண் சுக், மம்தா பானர்ஜியை ஒரு நவீன ஜின்னா என்றுள்ளார். சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதற்காக இந்துக்களின் பாதுகாப்பை சமரசம் செய்வதாக குற்றம் சாட்டினார். முர்ஷிதாபாத்தில் மூன்று பேரின் மரணம் குறித்து மம்தா மௌனம் சாதிப்பது தவறு அவர் கண்டித்துள்ளார். பாஜகவின் ஷெஹ்சாத் பூனவல்லா, இது இந்துக்களுக்கு எதிரான அரசு ஆதரவுடன் நடக்கும் வன்முறை என்று கூறி உள்ளார்.

இந்துக்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கு மம்தா பானர்ஜி ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை? அதற்கு மட்டும் மௌனம் காப்பது ஏன்? என்று பாஜகவின் மேற்கு வங்க பிரிவு கேள்வி எழுப்பியுள்ளது.

உறுதியாக நிற்கும் பாஜக

பல தரப்பில் இருந்தும் அழுத்தங்கள் இருந்தபோதிலும், மோடி அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறது. வக்ஃப் திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படவில்லை. அதற்கு பதிலாக, சட்டம் ஒழுங்கை சரி செய்வதிலும், மத மோதல்கள் கைமீறி போகாமல் இருப்பதிலும் பாஜக கவனம் செலுத்துகிறது. குறிப்பாக மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் மோசமாகத் தோல்வியடைந்துள்ளன.

வக்ஃப் (திருத்த) சட்டம் நிறைவேற்றப்பட்டதில் இருந்து பல மாநிலங்களில் அதற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. முக்கியமாக மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத், டயமண்ட் ஹார்பர், டெல்லி மற்றும் தமிழ்நாடு போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வக்ஃப் (திருத்த) சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, சிபிஐ(எம்), ஆர்ஜேடி, ஜேஎம்எம் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில்தான் இந்த போராட்டங்கள் நடக்கின்றன. இந்த நிலையில் திருத்தப்பட்ட சட்டத்தின் நேர்மறையான தாக்கம் மற்றும் நன்மைகள் குறித்து முஸ்லீம் சமூகத்திற்கு கல்வி கற்பிக்கும் நோக்கில், 'வக்ஃப் சீர்திருத்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை' பாஜக ஏப்ரல் 20 முதல் மே 5 வரை நடத்த உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+