முஸ்லிம்களின் தொப்பியை மோடி அணியாதது தவறு இல்லையே.: மதகுரு மெக்மூத் மதானி
டெல்லி: முஸ்லிம்கள் மத நிகழ்வுகளின் போது அணியும் பாரம்பரிய தொப்பியை அணியாததற்கு நரேந்திர மோடி மன்னிப்பு கேட்கத்தேவையில்லை என்று முஸ்லிம் மத குருக்களில் ஒருவரான மவுலானா மெக்மூத் மதானி கூறியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, நிகழ்ச்சி ஒன்றில் முஸ்லிம்கள் வழங்கிய பாரம்பரிய தொப்பியை நரேந்திர மோடி அணிந்து கொள்ள மறுத்தார். இதனை ல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்தன. இப்போது தேர்தல் காலம் என்பதால் அந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த மெக்மூத் மதானி கூறியதாவது:
என்னை ஹிந்துக்களைப் போல நெற்றியில் திலகத்தை அணிய கூறினால் அதனை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதனால் என்னை ஒரு மோசமான நபர் என்று நீங்கள் சித்தரிக்க முடியாது.
என் நடவடிக்கைகளின் அடிப்படையில்தான் நான் மோசமானவானாக இருக்க முடியும். முஸ்லிம்களின் பாரம்பரிய தொப்பியை அணிய மறுத்ததில் எந்த தவறும் இருப்பதாக நான் கண்டுபிடிக்கவில்லை. முஸ்லிம்களின் பாரம்பரிய தொப்பியை அணிந்து கொள்வதாக காட்டிக் கொள்கிறவர்கள் அனைவரும் ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் அர்த்தம்.
இன்னும் சொல்லப் போனால் நரேந்திர மோடி, முஸ்லிம்களின் பாரம்பரிய தொப்பியை அணியக் கூடாது. அதே நேரத்தில் குஜராத் வன்முறை தொடர்பில் மோடி மீது தவறிருந்தால் அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இவ்வாறு மெக்மூத் மதானி கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications