புனே படுகொலை... இந்துக் குடும்பங்கள் தாக்கப்படாத வண்ணம் ரோந்து சுற்றிய முஸ்லீம் சகோதரர்கள்
புனே: புனே தொழில்நுட்ப பணியாளர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக ஹடாப்சர் பகுதியில் உள்ள சைய்யது நகரில் குடியிருக்கும் இந்துக்களின் வீடுகள் எதுவும் தாக்கப் படாத வண்ணம் அங்குள்ள முஸ்லீம் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக ரோந்து மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது.
கடந்த வாரம் புனே தொழில்நுட்ப பணியாளரான சோலாப்பூரை சேர்ந்த மொசின் ஷேக் (24) என்ற வாலிபர் மாலை தொழுகைக்குச் சென்று திரும்பியபோது, மர்மநபர்களால் ஹாக்கி மட்டையால் தாக்கப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அந்த வாலிபர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாகப் பலியானார்.
பலியான மொசின் மீது சிவசேனா தலைவர் பால் தாக்கரேயையும், மராட்டிய மன்னர் சிவாஜியையும் தரக்குறைவாக விமர்சித்து 'பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த கொலை சம்பவத்தின் தொடர்புடைய ராஷ்டீரிய சேனை அமைப்பின் உறுப்பினர்கள் 17 பேரை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இவர்கள் மீது கொலைக் குற்றம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சமூகவலைதளமான பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டதற்காக வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டது புனே நகரில் பதட்டத்தை உண்டாக்கியது. அதன் தொடர்ச்சியாக சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படத்தை, பேஸ்புக் இணையதளத்தில் யாரோ, மோசமாக சித்தரித்துள்ளதாக பரவிய தகவலால் பல இடங்களில், தலித் அமைப்பினர் வன்முறையில் இறங்கி, பஸ்கள் மீது கல்வீசி தாக்கினர்.
இந்நிலையில் புனேயில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஹடாப்சர் பகுதியிலுள்ள சைய்யது நகரில் கலவரம் வெடிக்கலாம் என அச்சம் எழுந்தது. ஆனால், மாறாக அங்குள்ள முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக அப்பகுதியில் வசித்து வரும் பண்டிட் டாலரே என்ற 60 வயது முதியவர் கூறுகையில், ‘அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். யாரும் மற்றவர்களைப் பார்த்து பயப்படக் கூடிய சூழல் இங்கில்லை' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், முஸ்லீம் வாலிபர் மொசைன் அடித்துக் கொல்லப்பட்ட நாளன்று மர்மநபர்களால் தங்கள் பகுதி இந்துக் குடும்பங்கள் தாக்கப்படலாம் என கருதிய சைய்யது நகர் முஸ்லீம் குடும்பத்தார், அவர்களைப் பாதுகாக்கும் விதமாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அப்பகுதியில் குடியிருக்கும் அக்பர் ஷேக் என்பவர் கூறியுள்ளார்.
கலவரம் உண்டான அன்று முஸ்லீம் சகோதரர்களின் நடவடிக்கையால் தாங்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த கந்தாரே என்பவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அப்பகுதி மக்கள் தீபாவளி, ஹோலி, விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான் முதலிய பண்டிகைகளை அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாகக் கொண்டாடி வருவதே தங்களது ஒற்றுமைக்கு சாட்சி என அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications