முசாபர்நகர் கலவரத்துக்கு அரசியல்வாதிகளே காரணம்: ராகுல் குற்றச்சாட்டு
அலிகார்: உத்தரப்பிரதேசம் முசாபர்நகர் கலவரத்துக்கு அரசியல்வாதிகளே காரணம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் லோக்சபா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளைப் பாதுகாக்கும் அவசரச சட்டத்தை எதிர்த்து உண்மையையே நான் பேசினேன்.
ஏழை விவசாயிகளின் நிலத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலான நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஆனால் நாங்கள் போராடி அச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளோம்.

லேப்டாப் வேலை செய்கிறதா?
உத்தரப்பிரதேச மாநில அரசு லேப்டாப் கொடுப்பதாக அறிவிக்கிறது. ஆனால் மாநிலத்தில் மின்சாரம் இருக்கிறதா? அந்த லேப்டாப் சரியாக இயங்குகிறதா?

உணவுக்கு உத்தரவாதம்
காங்கிரஸ் அரசு ஆட்சிக்காலத்தில் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். உங்கள் குடும்பங்களுக்கு ஒவ்வொருநாளும் உணவு கிடைப்பதை உறுதி செய்யக் கூடிய உணவு பாதுகாப்பு மசோதாவை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.

உ.பி. அரசு நடைமுறைப்படுத்தாது..
ஆனால் உத்தரப்பிரதேச அரசோ 2014ஆம் ஆண்டு தேர்தல் வரை அதை செயல்படுத்தாது. ஏனென்றால் மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்துவிடுவார்களோ என்ற பயம்தான்.

முசாபர் நகர் கலவரம்
முசாபர்நகர் கலவரத்தின் போது நான் அங்கு சென்று இருதரப்பு மக்களிடமும் பேசினேன். அவர்களுக்கு இடையே எந்த ஒரு பகையும் இல்லை. சில சுயநல அரசியல்சக்திகளே கலவரத்தை தூண்டிவிட்டிருக்கின்றன. ஆளும் மாநில அரசு முன்னெச்சரிக்கையாக இருந்திருந்தால் அந்த கலவரமே நடந்திருக்காது.

காங்கிரசால் மட்டுமே முடியும்
அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே உத்தரப்பிரதேச மாநிலம் முன்னேறும். அந்தப் பணியை காங்கிரஸ் மட்டுமே செய்து கொண்டிருக்கிறது. சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளால் அதை சாதிக்க முடியாது.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications