அப்பா, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்: கெஜ்ரிவால் மகள் உறுதி
டெல்லி: டெல்லி முதல்வராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள தனது அப்பா கெஜ்ரிவால் மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளைக் கட்டாயம் நிறைவேற்றுவார் என அவரது மகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
டெல்லியின் முதல்வராக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். ராம்லீலா மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவுக்கு கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதா கெஜ்ரிவால், மகள் ஹர்சிதா, மகன் மற்றும் பெற்றோர் ஆகியோருடன் மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுத்து பயணம் மேர்கொண்டார். அவர்களுடன் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களும் மற்ற மந்திரிகளின் குடும்பத் தினர்களும் அந்த ரயிலில் சென்றார்கள்.

இந்நிலையில் தனது தந்தை டெல்லி மாநில முதல்வர் ஆனது குறித்து அவரது மகள் ஹர்சிதா கூறியதாவது :-
எனக்கு இது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. இது அப்பாவின் முதல்படி. அடுத்து அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போராட வேண்டியது உள்ளது. அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும். லஞ்சம் இல்லாத இந்தியா உருவாகும்' என்றார்.
கெஜ்ரிவாலின் தந்தை கோபிந்த் ராம் கெஜ்ரிவால் பட்டதாரியான இவர் எலக்ட்ரிகல் என்ஜினீயர் ஆவார். தாய் கீதாதேவி. இவரும் பட்டதாரிகளாவர். கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இவரும் இந்திய வருவாய்த்துறையில் (ஐ.ஆர்.எஸ்) பணிபுரிந்து வருகிறார்.
கெஜ்ரிவாலுக்கு ஹர்சிதா என்ற மகள் தவிர புல்கித் என்ற ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் இருவரும் தற்போது பள்ளியில் படித்து வருகிறார்கள்.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications