தந்தையின் காதலை ஆதரிக்கிறேன்… திக்விஜய் சிங் மகன்
போபால்: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திக்விஜய்சிங்கின் காதலுக்கு அவருடைய மகன் ஜெய்வர்த்தன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபா டிவி செய்தி வாசிப்பாளர் அம்ரிதா ராயை காதலிப்பதாக திக்விஜய் சிங் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியானது.
ஆனால் அவர், நான் எதையும் மறைக்கவில்லை, அம்ரிதாவை காதலிப்பது உண்மைதான். விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப்போகிறோம் என்று கூறினார்.
திக்விஜய்சிங் இளம் வயதில் ஆஷா என்பவரை திருமணம் செய்தார். புற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு ஆஷா உயிரிழந்தார்.

4 மகள்கள் 1 மகன்
அவருக்கு 4 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மகன் ஜெய்வர்தன், மத்தியபிரதேசம் ரகோகார் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

மத்தியபிரதேச முதல்வராக
திக்விஜய் சிங்1980 - 84 காலகட்டத்தில் அர்ஜூன்சிங் அமைச்சரவையில் அமைச்சராக இருந்துள்ளார். 1993 முதல் 2003 வரை இருமுறை தொடர்ந்து முதல்வராக இருந்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர்
இப்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகிக்கும் திக்விஜய் சிங்கிற்கு 67வயதாகிறது. மனைவி இருந்து ஒரு வருடம் கூட நிறைவடையவில்லை அதற்குள் 47 வயதான செய்தி வாசிப்பாளரை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை இருவருமே ஒப்புக் கொண்டனர்.

அம்ரிதாவின் ஆங்கிலப்புலமை
என்டிடிவி, ஸ்டார் நியூஸ் சேனல்களில் பணியாற்றிவர் அம்ரிதா ராய். தற்போது ராஜ்யசபா டிவியில் செய்தி தொகுப்பாளராக பணிபுரிகிறார். அவரது ஆங்கிலப்புலமையை புகழ்ந்து பேசாத அரசியல்வாதிகளே இல்லையாம். எப்படியோ திக் விஜய்சிங் வீசிய காதல் வலையில் விழுந்து விட்டார்.

கணவருடன் விவாகரத்து
அம்ரிதா திருமணமானவர்தான் தற்போது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். விவாகரத்திற்கும் விண்ணப்பித்துள்ளார். வழக்கு முடிந்த உடன் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.

மகள் வயதுதான்
திக்விஜய்சிங்கின் மூத்தமகளுக்கும் அம்ரிதாவிற்கும் ஒரே வயதுதானாம். மகள்கள் இந்த காதலை ஏற்றுக் கொண்டார்களாக தெரியவில்லை. ஆனால் அவருடைய ஒரே மகன் ஜெய்வர்த்தன், தந்தைக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார்.

அப்பாவிற்கு ஆதரவு
இது எனது அப்பாவின் சொந்த விஷயம். அதுகுறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. என்னுடைய அப்பாவுக்கு எனது முழு ஆதரவு உண்டு என்று பதில் அளித்துள்ளார் ஜெய்வர்த்தன்.
-
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு! -
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சாதி பெயர் இருந்தது தட்டச்சு பிழை - சிங்காநல்லூர் ஸ்ரீநிதி விளக்கம்! -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது












Click it and Unblock the Notifications