சில்லறைக்கு அல்லாட விட்டுவிட்டு மைசூரு பிரஸ்ஸில் மட்டுமே 500 ரூபாய் அச்சடிக்கிறார்களாம்!
மைசூரு: சில்லறை தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்படும் நிலையில் மைசூருவில் உள்ள ரிசர்வ் வங்கியின் அச்சகத்தில் 500 ரூபாய் நோட்டுகள் மட்டும் அச்சடிக்கப்படுகின்றது.
கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன் என பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தார். அவர் பாட்டுக்கு அறிவிப்பை வெளியிட்டுவிட்டு ஜப்பானுக்கு பறந்துவிட்டார்.
இந்த திடீர் அறிவிப்பால் ஆடிப் போன மக்கள் கையில் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகள், தபால் நிலையங்களில் வரிசையில் நின்று வருகிறார்கள்.

உயிரிழப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் வரிசையில் நின்று பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ரூ.2000
ரூ.2000 நோட்டுகளை வைத்துக் கொண்டு மக்கள் சில்லறை இல்லாமல் அல்லாடுகிறார்கள். பெரும் பணக்காரர்கள் அல்ல மாறாக அன்றாடங்காட்சிகள் தான் மோடியின் நடவடிக்கையால் திண்டாடி வருகிறார்கள்.

மைசூரு பிரஸ்
கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள ரிசர்வ் வங்கியின் அச்சகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக ரூ.2000 மற்றும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டிருக்கிறது.

தவிப்பு
ஏடிஎம்கள் மற்றும் வங்கிகளில் தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கின்றன. ஆனால் 100 ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடாக உள்ளது. 2000 ரூபாய் நோட்டை வைத்துக் கொண்டு சில்லறை இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்.

ரூ.500
நாட்டில் சில்லறை பிரச்சனை அதிகரித்துள்ள நிலையில் மைசூரு அச்சகத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டு 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே அச்சிடப்பட்டு வருகின்றது. புதிய 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தட்டுப்பாடு
மைசூரு அச்சகத்தில் மட்டும் தான் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகின்றது. இதனால் தான் பெரும் பண பற்றாக்குறை நிலவுகிறது. தமிழகத்தில் சில்லறை தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது.

சர்ஜிக்கல் ஸ்டிரைக்
மோடி கறுப்பு பணத்திற்கு எதிராக அல்ல ஏழை, எளிய மக்களுக்கு எதிராகவே சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடித்திவிட்டார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications