நாகாலாந்து மலைக்குள் கொட்டி கிடக்கிறது தங்கம்- ஆய்வில் கண்டுபிடிப்பு
பெங்களூர்: நாகாலாந்து மாநிலத்தின் மலைப்பகுதியில் தங்கம் அதிக அளவில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக பிரபல புவியியல் வல்லுநர் நரேஷ் கோஷ் தெரிவித்துள்ளார்.
பாட்னா பல்கலைக்கழகத்தின், ஓய்வு பெற்ற புவியியல் பேராசிரியரான நரேஷ் கோஷ், நடப்பு அறிவியல் என்ற புத்தகத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
நாகாலாந்து மாநிலத்தின் மலைப்பகுதிகளில் உள்ள பாறைகளின் அடியில் தங்கம் அதிக அளவு தேக்கமடைந்துள்ளதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்திய துணைக் கண்டமும், ஐரோப்பிய துணைக் கண்டமும் பழங்காலத்தில் ஒன்றுடன் ஒன்று மோதின. அப்போது எழுந்த மலைதான் நாகாலாந்தில் உள்ளது.
இதுபோன்ற மலைப்பாறைகளுக்குள் தங்கம் இருக்க வாய்ப்பு அதிகம். எனவே இந்த மலையில் இருந்து 1,200 பகுதிகளில் வெட்டி எடுக்கப்பட்ட பாறைகளை எனது மாணவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தார்கள். இந்த ஆய்வை நடத்த பெங்களூரிலுள்ள தேசிய புவியியல் அளவை துறையில் வசதியுள்ளது.
அதன் உதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வில், இயற்கை தங்கம் மற்றும் வெள்ளி-தங்கம் இணைந்த கலவை கண்டுபிடிக்கப்பட்டது.
நாகாலாந்து தலைநகர் கோஹிமாவில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மலைப்பகுதியின் மையத்தில்தான் அதிக அளவுக்கு தங்க கனமம் கொட்டிக்கிடப்பது பாறை மாதிரிகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
ரூ.15.15 லட்சம் கோடி எங்கே? பங்குச்சந்தையை உலுக்கிய 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்' மோசடி.. என்ன நடந்தது?! -
தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தங்க நகையை எப்படியாவது வாங்கிடனும்.. கையில் பணமில்லை.. தீயில் உருகும் பழைய நகைகள்.. புதிய மாற்றம்! -
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications