For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மணி்ப்பூர் ஆளுநராகப் பதவியேற்றார் நஜ்மா ஹெப்துல்லா

Google Oneindia Tamil News

இம்பால்: மணிப்பூர் மாநில ஆளுநராக நஜ்மா ஹெப்துல்லா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

முன்னாள் பாஜக துணைத் தலைவரும், மத்திய அமைச்சருமான நஜ்மா ஹெப்துல்லா சமீபத்தில் மணிப்பூர் ஆளுநராக அறிவிக்கப்பட்டார். இன்று அவர் பதவியேற்றுக் கொண்டார். தலைநகர் இம்பாலில் நடந்த எளிமையான விழாவில் வருக்கு மணிப்பூர் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் ராகேஷ் ரஞ்சன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Najma Heptulla sworn-in as Governor of Manipur

மணிப்பூரின் 18வது ஆளுநராக நஜ்மா பொறுப்பேற்றுள்ளார். பதவியேற்பு விழாவில் முதல்வர் ஒக்ராம் இபோபி சிங், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த ஜூலை மாதம்தான் மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகியிருந்தார் நஜ்மா. தற்போது அவருக்கு ஆளுநர் பதவியை பாஜக அரசு கொடுத்துள்ளது.

இதேபோல பாஜகவைச் சேர்ந்த கிரண் பேடியை, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பாஜக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Najma Heptulla, former Vice President of the Bharatiya Janata Party (BJP), was sworn-in on Sunday as the 18th Governor of Manipur. The simple but impressive function was held at Darbar Hall of Raj Bhavan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X