தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சி... திருப்பதியில் பிரார்த்தனை செய்த நமீதா!
திருப்பதி: தனது பிறந்த நாளையொட்டி இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி கும்பிட்டார் நடிகை நமீதா.
தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் அவர் வேண்டிக் கொண்டதாக பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நடிகையாவதற்கு முன்பு எப்படிக் கொண்டாடினாரோ... ஆனால் நடிகையான பிறகு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேல் தனது பிறந்த நாளை ஆதரவற்றோர், ஏழைகள் பயனடையும் வகையில் கொண்டாடி வருகிறார் நடிகை நமீதா.
ஆதரவற்றோர் பள்ளிகள், விடுதிகள், இல்லங்களுக்குச் சென்று உணவு, உடை, பரிசுகள் வழங்கி தனது பிறந்த நாளை அவர் கொண்டாடுகிறார். ஏழை மாணவர்கள் பயனடையும் வகையில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் திறந்து வைத்தார்.

இந்த ஆண்டு தனது பிறந்த நாளை புரசைவாக்கத்தில் உள்ள அருண் ரெயின்போ ஹோமில் குழந்தைகளுடன் கொண்டாடுகிறார். உணவுடன், அவர்களுக்கு தேவையான பரிசுப் பொருட்களையும் வழங்குகிறார்.
திருமலையில்...
அதற்கு முன் திருப்பதி திருமலையில் சாமி தரிசனம் செய்தார் நமீதா. நேற்று திருப்பதி சென்றவர், காலையில் தரிசனம் முடித்துக் கொண்டு வெளியில் வந்தார். நமீதா வருகை அறிந்ததும் மீடியாக்கள் குவிந்தன.

அவர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் நல்லாட்சி தொடர வேண்டும். தமிழக மக்கள் எல்லா வளங்களும் பெற்று நிம்மதியாக இருக்க வேண்டும். இதுதான் எனது வேண்டுதல். அது சீக்கிரமே பலிக்கும்," என்றார்.
தரிசனம் முடிந்த கையோடு இன்று சென்னை திரும்பினார் நமீதா.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications