விடைபெற்றார் அமெரிக்க தூதர் நான்ஸி பாவெல்! தற்காலிக தூதராக கேத்லீன் நியமனம்!
டெல்லி: இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்ஸி பாவெல் தனது பதவிக்காலம் முடிந்ததை அடுத்து அமெரிக்காவுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றார். அவருக்குப் பதிலாக அந்நாட்டு வெளியுறவுத்துறையின் மூத்த பிரதிநிதியான கேத்லீன் ஸ்டீவன்ஸ் இந்தியாவுக்கான தற்காலிகத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டில் இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்ட நான்ஸி பாவெல், அமெரிக்காவில் இந்தியத் தூதரக அதிகாரி தேவயானி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையினால் தமது பதவிக்காலத்தை முடித்துக் கொள்ளவிரும்புவதாக கடந்த மார்ச் மாதத்தில் அறிவித்தார். இதையடுத்து அவர் தமது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு நேற்று அமெரிக்காவுக்கு கிளம்பிச் சென்றார்.

வரும் ஜூன் மாதம் இந்தியா வரவுள்ள கேத்லீன் ஸ்டீவன்ஸ் தாற்காலிகத் தூதர் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். நிரந்தர தூதரை நியமிக்கும்வரையில் இந்தப் பதவியில் அவர் தொடர்வார் என்று அமெரிக்க செனட் அறிவித்துள்ளது.
கடந்த 2008 முதல் 2011 வரை தென் கொரியாவுக்கான அமெரிக்க தூதராக கேத்லீன் ஸ்டீவன்ஸ் பதவி வகித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறையில் பல முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார். இதனிடையே இந்தியாவுக்கான நிரந்தர தூதரை அதிபர் ஒபாமாவின் அரசு இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications