நாரா லோகேஷ் 2.0! எரியும் அடுப்பின் மீது அமர்ந்திருக்கும் அமைச்சர்! சாதிப்பாரா?
அமராவதி: அப்பாவின் அரசியல் கனவை வெற்றி பெற வைத்த லோகேஷ் இப்போது வேலையில்லாமல் திண்டாடி வரும் ஆந்திர இளைஞர்களின் கனவை நனவாக்க வேண்டிய சவாலை ஏற்று எரியும் அடுப்பின் மீது உட்காருவதைப் போல அமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவர் இந்தச் சவாலில் வெற்றி பெறுவாரா?
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன்தான் நாரா லோகேஷ், அமைச்சரவையில் கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் இதற்கு முன்பே அவரது தந்தை 2017 முதல் 2019 வரை முதலமைச்சராக இருந்தபோது ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகளின் அமைச்சராக இருந்தார். அப்போது அவருக்கு அதிக அரசியல் அனுபவம் இல்லை. மேலும் எதிர்க்கட்சிகள் தெலுங்கு தேசம் வாரிசு அரசியலில் அதிக ஆர்வம் காட்டுவதாக விமர்சித்து வந்தனர். அது லோகேஷுக்கு தலைவலியாக மாறியது.

இந்த முறை தெலுங்கு தேசம் 135 இடங்களில் வெற்றி பெற்று, மாநிலத்தில் வலுவான எதிர்க்கட்சியே இல்லை என்ற அளவில் ஆட்சியில் அமர்ந்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சிக்கு அடுத்து 21 இடங்களை தன் வசம் வைத்து ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆட்சியில் துணை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டுவிட்டார். ஆகவே, அதிக எதிர்ப்புகள் ஆளும் கட்சிக்கு இல்லாமல் போய்விட்டது. முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி வெறும் 11 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்துள்ளது.
இந்நிலையில்தான் மோடியின் 3.0 வைபோல நாரா லோகேஷ் 2.0 அத்தியாயத்தை ஆந்திர அரசியலில் தொடங்கியுள்ளார். இதன் மூலம் அவர் தனது தந்தையின் இழந்த அரசியல் செல்வாக்கை மீட்டு, தெங்கு தேசம் கட்சியில் தான் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பதை நிரூபித்துள்ளார். அதேநேரம் அவர் முன்னால் நிறையச் சவால்கள் இந்த முறை இருக்கின்றன. ஆந்திராவுக்கு தனி அந்தஸ்து பெற்று மாநிலத்தை முதல் இடம் நோக்கி நகர்த்த அவர் அதிக சக்தியைச் செலவழிக்க வேண்டி இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். அதைச் செய்து முடிக்கும் திறமை லோகேஷுக்குதான் இருப்பதாக மக்களும் நம்புகின்றனர். அவர் முன் உள்ள முதல் சவால், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை தங்கள் மாநிலத்தை நோக்கி ஈர்க்க வேண்டும்.
கடந்த காலங்களில் லோகேஷ் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக இருந்த போது சிறப்பாகச் செயல்பட்டதற்காக பல்வேறு பிரிவுகளில் மத்திய அரசின் ஏராளமான விருதுகளைப் பெற்றுத் தந்தார். அதாவது 2018 ஆம் ஆண்டு கிராமப்புற வளர்ச்சிகளில் புரட்சிகரமான பங்களிப்பைச் செய்ததற்காக SKOCH விருதை லோகேஷ் பெற்றார். அதேபோல நிர்வாகத்தில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ததற்காக டிஜிட்டல் லீடர் என்ற விருதையும் பெற்றார். பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சியில் பல புதுமைகளைக் கையாண்டதற்காக மத்திய அரசின் விருதையும், கலாம் இன்னோவேஷன் இன் கவர்னன்ஸ் விருதையும் மாநிலத்திற்குப் பெற்றுத் தந்தார்.
இவரது ஆட்சிக் காலத்தில், மாநிலம் முழுவதும் 25,000 சிமெண்ட் கான்கிரீட் சாலைகளை அமைத்துத் தந்தார். இந்தச் சாதனையை இன்றுவரை யாரும் முறியடிக்கவில்லை. 2018 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் தொழில்முனைவோரின் வருடாந்திர உச்சி மாநாட்டில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திச் சிறப்பு விருந்தினராக லோகேஷ் அழைக்கப்பட்டார். உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய எதிர்கால கவுன்சில்களின் வலையமைப்பிற்கு (the World Economic Forum's Network of Global Future Councils) பரிந்துரைக்கப்பட்ட ஒரே இந்திய அரசியல் தலைவர் இவர்தான்.
உலக அளவில் முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக ஆந்திராவை மாற்ற அவர் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை லோகேஷ் செய்துள்ளார். HCL, Foxconn, Zoho, Celkon போன்ற புகழ்பெற்ற ஐடி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களை தங்கள் மாநிலத்திற்குக் கொண்டு வந்தார். தெலங்கானா பிரிவினைக்குப் பிறகு ஆந்திராவுக்கு கொண்டுவரப்பட்ட மிகப் பெரிய முதலீடுகள் இவை. ஆனாலும், கடந்த சட்டசபைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரசும் ஐ-பேக் ஆகிய இரண்டு இவருக்கு எதிராகச் செய்த மோசமான பிரச்சாரத்தால் லோகேஷ் கடந்த முறை தோல்வியைத் தழுவினார். ராகுலைப் போல பப்பு என்று அரசியல் உலகில் முத்திரை குத்தப்பட்டார். சமூக ஊடகங்களில் அதிகம் விமர்சிக்கப்படும் தலைவர்களின் பட்டியலில் இவர் இடம்பெற்றார்.
தோல்விக்குப் பிறகு, அவர் கொரோனாவின் போது கடுமையாகப் போராடி உடல் எடையைக் குறைத்தார். மக்களைக் கவரும்படி பேசுவதற்காகக் குரல் பயிற்சி எடுத்தார். அதன் விளைவாக ஆந்திர மாநிலத்தின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக மாறி இருக்கிறார். மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து அவர் நடத்திய 3,132 கிலோமீட்டர் மாரத்தான் பாதயாத்திரை அவருக்கு ஆழமான அரசியல் அறிவைப் பெற்றுத் தந்துள்ளது. இவரது பாதயாத்திரை ஆந்திர அரசியல் வரலாற்றில் மிக நீளமானது. இந்த முறை வெற்றிக்கு அதுதான் ஆணிவேர். இப்போது முதலீட்டாளர்களின் பார்வையில் ஆந்திராவுக்கு நற்பெயரை உருவாக்கி தருவதில் லோகேஷுக்கு மிகப் பெரிய பணி காத்திருக்கிறது. இளைஞர்களுக்கான புதிய வேலை வாய்ப்புகளை அவர் உருவாக்க வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சுய வேலைகளைத் தவிர, ஆந்திராவில் வேறு வேலைகள் இல்லை. பிராங்க்ளின் டெம்பிள்டன், லுலு, அமர ராஜா போன்ற நிறுவனங்கள் கடந்த ஆட்சியில் மோசமாக நடத்தப்பட்டன. வேலை வாய்ப்பு இல்லாமல் போக இதுவும் ஒரு முக்கிய காரணம். ஆகவே, கோடிக்கணக்கான படித்த இளைஞர்கள் லோகேஷை நம்புகின்றனர். அப்பாவின் அரசியல் கனவை வெற்றி பெற வைத்த இந்த மகன் இப்போது ஆந்திர இளைஞர்களின் கனவையும் நனவாக்க வேண்டிய சவாலை ஏற்று எரியும் அடுப்பின் மீது உட்காருவதைப் போல அமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications