ஆசிரமத்தில் அடைத்து வைத்து பெண் பலாத்காரம்.. ஆசாரம் பாபு மகன் குற்றவாளி.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அகமதாபாத்: பாலியல் பலாத்கார வழக்கில், சாமியார் ஆசாராம் பாபு மகன் நாராயண் சாய் குற்றவாளி என்று, அகமதாபாத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாடு அறிந்த பிரபல சாமியார் ஆசாராம் பாபு. குஜராத் மாநிலம் சூரத் நகரில் இவருக்கு சொந்தமாக ஆசிரமம் உள்ளது. இங்கு 2002 முதல் 2005ம் ஆண்டு வரை தங்கியிருந்த ஒரு இளம் பெண், நாராயண் சாய் மீது, 2013ம் ஆண்டு, போலீசில் ஒரு பரபரப்பு புகாரை அளித்தார். அதில், ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, நாராயண் சாய், தன்னை தொடர்ச்சியாக அடைத்து வைத்து, பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்பட்டிருந்தது.

இதேபோல, அந்த இளம்பெண்ணின் அக்கா, தன்னை ஆசாராம் பாபு பலாத்காரம் செய்து வந்ததாக தனியாக ஒரு புகாரை போலீசில் கொடுத்தார். காவல்துறையினர் ஆசிரமத்தில் விசாரணையை ஆரம்பித்தனர்.
பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதில் நாராயண் சாய் கைது செய்யப்பட்ட நிலையில், சூரத் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்றம், இவ்வழக்கில் ஆசாராம் பாபுவின் மகன் நாராயணன் சாய் குற்றவாளி என அறிவித்தது. இந்த குற்றத்திற்கான தண்டனை விவரம், ஏப்ரல் 30ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
சூரத் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்றம், இவ்வழக்கில் ஆசாராம் பாபுவின் மகன் நாராயணன் சாய் குற்றவாளி என அறிவித்தது. தண்டனை விவரம் 20-ம் தேதி அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications