பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை வழக்கில் இந்துத்துவா இயக்க நிர்வாகி கைது
மும்பை: பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கரை படுகொலை செய்த வழக்கில் ஹிந்து ஜனஜக்ருதி சமிதி என்ற இந்துத்துவா இயக்கத்தைச் சேர்ந்த வீரேந்திரசிங் தாவ்டே நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
புனேயை சேர்ந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு 20-ந் தேதி நடைபயிற்சி சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர்.

இதில் நரேந்திர தபோல்கர் உயிரிழந்தனர். மூட நம்பிக்கையை எதிர்த்து போராடிய நரேந்திர தபோல்கர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு விசாரணை கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. நரேந்திர தபோல்கர் படுகொலை செய்யப்பட்டு கிட்டதட்ட 3 ஆண்டுகள் ஆன நிலையிலும் ஒருவர் கூட கைது செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நரேந்திர தபேல்கர் கொலை செய்யப்பட்டதில் தொடர்புடைய வீரேந்திரசிங் தாவ்டே என்ற நபரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். ஹிந்து ஜனஜக்ருதி சமிதி என்ற இந்துத்துவா இயக்கத்தை சேர்ந்தவர் தாவ்டே என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications