நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை 3வது முறையாக கொண்டு வர மத்திய அரசு முடிவு!
டெல்லி: நிலம் கையகப்படுத்துவதற்கான அவசர சட்டத்தை 3வது முறையாக கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.
நிலம் கையகப்படுத்துவதற்கான அவசர சட்டம் கடந்த டிசம்பர் மாதம் முதல்முறையாக பிறப்பிக்கப்பட்டது. 2வது முறையாக ஏப்ரல் 3-ந்தேதி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இதற்கான மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட போதிலும் ராஜ்யசபாவில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரும் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை 3-வது முறையாக பிறப்பிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஒரு கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்து 6 வாரங்களுக்குள் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்று அரசியல் சட்டம் கூறுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது பகுதி கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. அதிலிருந்து 6 வாரங்களைக் கணக்கிட்டால், மே 31-ந்தேதிவரை கால அவகாசம் உள்ளது. அதற்குள் ஓர் அரசாணை மூலமாக அவசர சட்டத்தை மீண்டும் பிறப்பிக்கலாம்.
அதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறுவது அவசியம். பிரதமர் நரேந்திர மோடி தற்போது வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் 20-ந்தேதி நாடு திரும்புகிறார். அதன்பிறகு, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி தேவையான நடைமுறைகளை முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டுமானால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை அதிகாரப்பூர்வமாக ஜனாதிபதி முடித்து வைக்க வேண்டும். அப்படி முடித்து வைக்குமாறு நேற்று கூடிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது.
இதனால் பிரதமர் மோடி, நாடு திரும்பியவுடன் இந்த விவகாரம் சூடு பிடித்து 31-ந்தேதிக்குள் அவசர சட்டம் மீண்டும் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை மாதம் 3-வது வாரத்தில் தொடங்குகிறது. அப்போது நாடாளுமன்ற இரு சபைகளின் கூட்டு கூட்டத்தை கூட்டி நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications