சீனாவுடன் போட்டிபோட இந்தியாவுக்கு தேவை மூவர்ண புரட்சி- பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: 'இந்தியா மீண்டும் பாதைக்கு திரும்புகிறது, சீர்திருத்தங்களுக்கான செயல் திட்டம்' என்ற சீர்திருத்தங்கள் குறித்த புத்தக வெளியீட்டு விழா நேற்று டெல்லியில் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது:
நமது நாட்டின் மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்தான். இந்த மனித வளத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,. இவர்களது ஆற்றலை மேம்படுத்துவது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. அப்போதுதான் சீனாவுடன் இந்தியா போட்டியிட முடியும். சீனாவுடன் போட்டிபோட தயாராகுவதற்கு நமது தேசிய கொடி நமக்கு எப்போதும் நினைவூட்டிக் கொண்டுள்ளது. நமது தேசியக் கொடியை எடுத்துக்கொள்ளுங்கள், பச்சை நிறம், இரண்டாவது ஒரு பசுமை புரட்சியை நினைவுபடுத்துகிறது. வேளாண் பொருள் உற்பத்தியை பெருக்குதல், மதிப்பு கூட்டுதல், வேளாண் தொழில்நுட்பம், சேமிப்பு கிடங்கை பன்முகப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

தேசிய கொடியின் மத்தியிலுள்ள வெள்ளை நிறம் வெண்மை புரட்சியை நினைவவூட்டுகிறது. நாட்டில் பால் உற்பத்தியை பெருக்க வேண்டும், கால்நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதலில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
காவி நிறம் என்பது நமது சக்தியையும், ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது. நாட்டுக்கு காவி புரட்சி தேவைப்படுகிறது. இந்தியாவில் வளர்ந்து வரும் மின்சக்தி தேவையை பூர்த்தி செய்ய ஏற்றவிதத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பெருக்குதல், சூரிய மின்சக்தியை பெருக்குதல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
தேசிய கொடியிலுள்ள அசோக சக்கரம் நீல நிறத்திலுள்ளது. கடலின் வண்ணத்திலான அதை பார்க்கும்போது மீன் வளத்தை பெருக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும்.
உள்கட்டமைப்பு வளர்ச்சி என்றால் சாலை போடுவது மட்டுமே அனைவருக்கும் நினைவுக்கு வருகிறது. இனிமேல் மின்சார உற்பத்தியை பெருக்குவதும் நினைவுக்கு வர வேண்டும். ஆற்றங்கரைகளில், நதிபடுகைகளில் முன்பெல்லாம் நகரங்கள் அமைக்கப்பட்டன. இப்போது நெடுஞ்சாலைகளை ஒட்டி நகரங்கள் உருவாகுகின்றன. நாம் வேலைவாய்ப்புகளை பெருக்கி, மாற்றத்தை உருவாக்க 100 தரம்மிக்க புதிய நகரங்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு நரேந்திரமோடி பேசினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications