For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரள வெள்ள சேதத்தை ஹெலிகாப்டரில் பறந்து மோடி ஆய்வு.. ரூ. 500 கோடி நிவாரண உதவியும் அறிவிப்பு

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கேரளாவுக்கு 500 கோடி நிதியுதவி அறிவித்து மோடி அறிவிப்பு

    கொச்சி: கேரள முதல்ர் பினராயி விஜயனுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் அந்த மாநிலத்திற்கு வெள்ள நிவாரண உதவியாக ரூ. 500 கோடி நிதி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஏற்கனவே கேரளாவுக்கு மத்திய அரசு ரூ. 100 கோடி நிதியுதவியை அறிவித்துள்ளது. மேலும் வெள்ள பாதிப்பு நிலவரத்தை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார் மோடி.

    கேரளத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. இதனால் நிலச்சரிவு மற்றும் வெள்ளநீரில் சிக்கி 324 பேர் பலியாகிவிட்டனர். எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக இருப்பதால் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

    Narendra Modi is going to visit Kerala flood

    100 ஆண்டுகளில் இல்லாத மழை வெள்ளத்தை கேரளம் சந்தித்துள்ளது. 80 அணைகள் நிரம்பியதால் அவை திறக்கப்பட்டன. 2.2 லட்சம் பேர் 1500-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

    இந்நிலையில் இன்று காலை திருவனந்தபுரத்துக்கு வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கிருந்து கொச்சி சென்ற அவர் ஹெலிகாப்டர் மூலம் வெள்ள பாதிப்புகளை ஆய்வு பணிகளை ஆய்வு செய்யத் திட்டமிட்டிருந்தார். திட்டமிட்டபடி ஹெலிகாப்டரிலும் புறப்பட்டார். ஆனால் கன மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டு ஹெலிகாப்டர் திரும்பி விட்டது.

    வான்வழி ஆய்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் பிரதமர் பங்கேற்றார். அதில், முதல்வர் பினராயி விஜயன், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வெள்ள நிலைமை குறித்து பிரதமரிடம் முதல்வர் பினராயி விஜயன் எடுத்துரைத்தார். மேலும் அவசர வெள்ள நிவாரண நிதியாக ரூ. 2000 கோடியை மத்திய அரசிடம் அவர் கேட்டுக் கோரிக்கை விடுத்தார். இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் கேரளாவுக்கான நிதியுதவியை பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி ரூ. 500 கோடி நிதியுதவியை மத்திய அரசு கேரளாவுக்கு அளிக்கும் என்று மோடி தெரிவித்தார்.

    இந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் வானிலை மேம்பட்டு காணப்பட்டதால் ஹெலிகாப்டர் மூலம் வானில் பறந்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்று வான் வழியாக சேத விவரங்களைப் பார்வையிட்டார். அவருடன் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோரும் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.

    English summary
    PM Narendra Modi is going to visit Kerala flood as it affects very worst.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X