அகமதாபாத் டீக்கடையிலிருந்து மோடி அதிரடி பிரசாரம் - 1000 டீக்கடைகளில் நேரடி ஒளிபரப்பு!
அகமதாபாத்: வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது போல காங்கிரஸ்காரர்கள் போட்டு வைத்த டிகாக்ஷனை எடுத்து பாஜக காரர்கள் சூப்பராக ஊர் ஊராக டீ போட்டுக் கலக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் டைரக்டாக தற்போது மோடியே டீ கப்பை கையில் எடுத்து விட்டார். அதாவது தேநீருடன் ஒரு விவாதம் என்ற நூதனப் பிரசாரத்தை அவர் அகமதாபாத்தில் இன்று தொடங்கி வைத்தார்.
மேற்கு அகமதாபாத்தில் உள்ள இஸ்கான் காதியா டீக்கடையிலிருந்து தனது நூதனப் பிரசாரத்தை மேற்கொண்டார் மோடி. இதை நாடு முழுவதும் 1000 டீக்கடைகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்தனர். அத்தோடு வீடியோ கான்பரன்சிங் மூலம் டீக்கடைகளிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் மோடி பதிலளித்தார்.

டீ சாப்டுட்டே பேசலாமே
தேநீர் பருகியபடி ஒரு விவாதம் என்ற இந்த நிகழ்ச்சியை இன்று மோடி தொடங்கி வைத்து நாடு முழுவதும் காங்கிரஸார் மேற்கொண்டு வரும் டீ விற்பனையாளர் என்ற பிரசாரத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

டீக்கடையில் மோடி
இன்று மாலை இஸ்கான் காத்தியா டீக்கடைக்கு வந்தார் மோடி. அங்கு டீ வாங்கிச் சாப்பிட்ட மோடி பின்னர் பேசினார்.

1000 டீக்கடைகளில் நேரடி ஒளிபரப்பு
மோடியின் இந்த டீக்கடை பிரசாரத்தை நேரடியாகவும் ஒளிபரப்பு செய்தனர். நாடு முழுவதும் 1000 டீக்கடைகளில், மொத்தம் 300 நகரங்களில் இந்த நேரடி ஒளிபரப்பு மேற்கொள்ளப்பட்டது.

நேரடி விவாதம்
இந்த 1000 டீக்கடைகளில் 30 கடைகளில் உள்ளவர்களுடன் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடினார். அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது ஊழல், நல்லாட்சி உள்ளிட்டவை குறித்து அவர் பேசினார்.

கடைக்கு ஐந்து பேர்
இதற்காக ஒவ்வொரு டீக்கடையிலும் 5 பேரை தேர்வு செய்து அவர்கள் மோடியிடம் கேள்வி கேட்டனர்.

இன்றைய கச்சேரி..
மோடி நடத்தும் இன்றைய டீக்கடை விவாதத்தில் நல்லாட்சி என்பது குறித்து முக்கியமாக பேசினார்.
மோடியுடன் ஒரு கப் டீ வீடியோ
மோடியுடன் ஒரு கப் டீ வீடியோ
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications