மீண்டும் பாட்னா செல்கிறார் மோடி.. குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்திக்கிறார்
பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்தினரையும் படுகாயமடைந்தோரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி வரும் சனிக்கிழமை மீண்டும் அங்கு செல்ல இருக்கிறார்.
கடந்த ஞாயிறன்று பாட்னாவில் மோடி கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்ததில் 6 பேர் பலியாகினர். 100பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான சுஷில்குமார் மோடி, நரேந்திர மோடி கலந்து கொண்ட பாட்னா பொதுக்கூட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் மற்றும் படுகாயமடைந்தோர் பாரதிய ஜனதா கட்சியினர்.
இதனால் பலியானோர் குடும்பத்தினருக்கும் படுகாயமடைந்தோருக்கும் ஆறுதல் தெரிவிக்க வர வேண்டும் என்று மோடியிடம் கேட்டுக் கொண்டோம். அவரும் வரும் சனிக்கிழமையன்று பாட்னாவுக்கு மீண்டும் வருவதாக உறுதியளித்திருக்கிறார்.
வெவ்வேறு மாவட்டங்களின் 6 கிராமங்களுக்கு சென்று பலியானோர் குடும்பத்தினரை மோடி சந்திக்க இருக்கிறார். இந்த 6 கிராமங்களுக்கும் ஹெலிகாப்டர் மூலம் மோடி செல்கிறார்.
அத்துடன் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குண்டுவெடிப்பில் படுகாயமடைந்தோரையும் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications