அறிவியலோடு ஆன்மீகம்... திருப்பதி ஏழுமலையானை தரிசித்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை கழகத்தில் இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு இன்று தொடங்கியது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த சங்கத்தின் ஆண்டு மாநாடு இன்று தொடங்கி 5 நாட்களுக்கு நடைபெறுகிறது.

மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று திருப்பதிக்கு வருகை தந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு ரேணிகுண்டாவிற்கு வந்தார். ரேணிகுண்டாவில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்துக்கு வந்தார்.

Narendra Modi Offers Prayers at Tirumala Temple

திருப்பதி வந்த பிரதமரை முதல்வர் சந்திரபாபு நாயுடு வரவேற்றார். இதையடுத்து மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்து உரையாற்றினார். நோபல் பரிசு பெற்றவர்கள் உள்பட பிரபல விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.

அமெரிக்கா, ஜப்பான், இஸ்ரேல், பிரான்ஸ் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த நோபல் பரிசு பெற்றவர்கள் 6 பேரும், 14,000க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தங்க பதக்கங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து திருமலைக்கு சென்ற பிரதமர் மோடி ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருடன் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் உடனிருந்தார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி, திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 2,300 போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+