ஹிந்து மகாசபை தலைவர் வீர் சாவார்க்கர் பிறந்த நாள் - பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை!!
டெல்லி: ஹிந்து மகாசபை தலைவரான வீர சாவார்க்கரின் 131வது பிறந்தாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஹிந்து மகாசபையின் தலைவராக இருந்தவர் வீர சாவர்க்கர். அத்துடன் இன்றைய ஹிந்துத்துவா, ஹிந்து ராஷ்டிரம், அகன்ற பாரதம் போன்ற பாஜகவின் கோட்பாடுகளின் தந்தை என்று கூறப்படுகிறவர் வீர சாவர்க்கர்.
இன்று அவரது பிறந்தநாளையொட்டி தமது அலுவலகத்தில் வீர சாவர்க்கர் படத்துக்கு மலர் தூவிர் மரியாதை செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி. முன்னதாக தமது ட்விட்டர் பக்கத்தில், நாட்டின் தலைசிறந்த கவிஞரும், சுதந்திர போராட்ட தியாகியுமான விநாயக் தாமோதர் சாவார்க்கரின் பிறந்த நாளை நாம் இன்று கொண்டாடுகிறோம். ஹிந்துத்துவா என்ற சொல்லை உருவாக்கிய சாவார்க்கருக்கு, ஒட்டுமொத்த நாடே மரியாதை செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.
அவரின் தியாக உள்ளத்திற்கு தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
மகாத்மா காந்தி கொலையில் சாவார்க்கர்?
கடந்த 2004ஆம் ஆண்டு அந்தமானில் சாவார்க்கரின் பொன்மொழிகள் நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் ஒன்றின் போது பேசிய அப்போதைய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர் ஐயர், மகாத்மா காந்தி படுகொலையில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படுவர் வீர சாவார்க்கர் என்று பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications