For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அம்பானி சட்டப் பையில் மோடி,ராகுல்- கேஜ்ரிவால் சாடல்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தொழிலதிபதிர் முகேஷ் அம்பானியின் சட்டப்பையில்தான் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் இருக்கின்றனர் என டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சாடியுள்ளார்.

Narendra Modi, Rahul Gandhi two faces of Mukesh Ambani, says Kejriwal

ஜன் லோக்பால் மசோதா நிறைவேறாததால் டெல்லி முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கேஜ்ரிவால் விலகினார். இதைத் தொடர்ந்து லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்காக பிரச்சாரம் செய்ய கெஜ்ரிவால் கிளம்பிவிட்டார்.

ஹரியானா மாநிலம் ராக்தாக்கில் ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சார கூட்டத்தில் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், கியாஸ் விலை உயர்வு விவகாரம் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் தங்களது நிலையை வெளிபடுத்த வேண்டும் என்று கடிதம் எழுதினேன். அவர்கள் பதில் அளிக்க வில்லை. உங்களால் எப்படி பதில் அளிக்க முடியும்?.

நான் முகேஷ் அம்பானிக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்தேன். நரேந்திர மோடி எத்தனை விமானங்கள் வைத்துள்ளார். அவை அனைத்து முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது என்று சிலர் சொல்கிறார்கள்.

மோடி வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை கொண்டு வருவதாக கூறுகிறார். நான் முகேஷ் அம்பானியின் சுவிஸ் பேங்க் கணக்கு எண்ணை தருகிறேன். பாரதிய ஜனதா கட்சியால் நடவடிக்கை எடுக்க முடியுமா?

மீடியாக்களே நரேந்திர மோடியை பெரிது படுத்துகின்றன. நரேந்திர மோடியின் பிரச்சாரத்திற்கு ரூ. 50 கோடி செலவு செய்யப்படுகிறது. அதனை முகேஷ் அம்பானி கொடுக்கிறார். முகேஷ் அம்பானிக்கும் பாரதிய ஜனதாவிற்கும் என்ன தொடர்ப்பு?

மோடியும், ராகுல் காந்தியும் முகேஷ் அம்பானியின் சட்டைப் பையில் உள்ளனர் என்றார்.

English summary
The AAP kickstarted its Lok Sabha campaign on Sunday with its leader Arvind Kejriwal challenging Narendra Modi to "show guts" in giving a promise to bring back black money of his industrialist friends allegedly stashed away abroad if he becomes Prime Minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X