68வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் முதல் முறையாக கொடியேற்றினார் பிரதமர் மோடி!
டெல்லி: நாட்டின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசியக் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
நாடு முழுவதும் 68வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் டெல்லியில் இன்று காலை காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் தலைப்பாகை அணிந்த உடையுடன் டெல்லி செங்கோட்டை வந்தடைந்தார். அங்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றார்.

இதனைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி. பின்னர் நாட்டு மக்களுக்கு நரேந்திர மோடி உரையாற்றினார்.
வழக்கமாக தயாரிக்கப்பட்ட உரையை வாசிக்காமல் குறிப்புகளை வைத்துக் கொண்டு உரையாற்றினார் மோடி. அதேபோல் புல்லட் புரூப் அணியாமலும் மோடி உரையாற்றினார்.

சுதந்திர தின விழாவையொட்டி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
டெல்லி செங்கோட்டை வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தன. அத்துமீறி பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இன்றைய விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லோதா மற்றும் மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், அரசியல் பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications