"ஸ்கை பார் ஆல்".. 15,000 டாலரில் சவால் போட்டி வைக்கும் நாசா.. பங்கேற்க நீங்க ரெடியா?
பெங்களூரு: ரைட் சகோதரர்களின் 112வது பிறந்த நாளை உலகம் முழுவதும் விமான ஆர்வலர்கள், விமானிகள் என பலரும் கொண்டாடிய நிலையில் நாசா ஒரு சவாலான பரிசுத் திட்டத்துடன் பறப்பதில் ஆர்வம் கொண்டோரை ஈர்க்க வந்துள்ளது.
1903ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதிதான் உலகின் முதல் விமானத்தை வானில் கண்டது பூமி. ரைட் சகோதரர்கள் 12 விநாடி வானில் பறந்து சாதனை படைத்த நாள் அது.
இதையொட்டி நேற்று பலவிதமான கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன.

நாசாவின் போட்டி....
இந்த நிலையில் நாசா ஒரு பரிசுப் போட்டியை அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் விமான பயணங்கள் எப்படி இருக்கலாம் என்பது குறித்த யோசனையைத் தெரிவிக்கலாம். இதுதான் போட்டி.

ஸ்கை பார் ஆல்...
இதற்கு 15,000 டாலர் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுப் போட்டிக்கு ஸ்கை பார் ஆல் என்று பெயரிட்டுள்ளது நாசா.

சாமானிய மக்கள்...
இதுகுறித்து அது கூறுகையில், "சாமானிய மக்களுக்கும், விமானவியலின் வளர்ச்சிக்கும் எப்போதும் நெருக்கமான தொடர்பு உள்ளது. சாதாரண மக்களின் யோசனைகளே விமானவியல் துறையின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம். எனவே அந்த அடிப்படையில் மக்களிடமிருந்து கருத்துக்களையும், யோசனைகளையும் நாசா வரவேற்கிறது என்று கூறியுள்ளது நாசா.

யோசனைகள்...
2035ம் ஆண்டு மற்றும் அதற்கும் அப்பாலும் விமான பயணங்கள் எப்படி இருக்கும், எப்படி இருக்கலாம் என்று நாசாவுக்கு யோசனை கூறலாம். புதிய தொழில்நுட்பங்கள், வான் சுற்றுச்சூழலைக் காக்க என்ன செய்யலாம், விமானங்கள் எப்படி இருக்கலாம் என்பது உள்ளிட்ட யோசனைகளை நாசாவுக்கு தெரிவிக்கலாம்.

கடைசித் தேதி...
டிசம்பர் 21ம் தேதி முதல் இந்தப் போட்டி தொடங்குகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதிமுடிகிறது. இந்தப் போட்டியை நாசாவின் ஏரோநாட்டிக்ஸ் ஆய்வு மிஷன் இயக்குநரகம் நடத்துகிறது.
நீங்களும் ஐடியாக்களை அனுப்பி வைங்க. பரிசை வெல்லுங்க
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications