TCS: பெண்களை ஆசை வலையில் விழ வைத்த நிதா கான்.. சக ஊழியருக்கு வில்லனாக மாறிய நிதா கான்!
நாசிக் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) அலுவலகத்தில் பாலியல் துண்புறத்தல், சீண்டல், மதமாற்ற முயற்சி, மத உணர்வுகளை புண்படுத்தியது என பல குற்றச்சாட்டுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.
நிதா கான் மீதான முன் ஜாமீன் மனு விசாரணையின்போது, இந்த வழக்கு நாசிக் அலுவலகத்திற்கு அப்பால் மலேகான் மற்றும் மலேசியா வரை விரிவடைந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

நிதா கான் மீது குற்றச்சாட்டுகள்
சிறப்பு பொது வழக்கறிஞர் அஜய் மிஸ்ரா, நிதா கான் டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் பணியாற்றிய இளம் பெண்ணொருவரை இஸ்லாம் மதத்துக்கு மாற்ற முயற்சி செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
புகார் அளித்தவருக்கு நிதா கான் புர்கா வழங்கியதாகவும், பிரார்த்தனை முறைகள், ஹிஜாப் அணிதல், மத நூல்கள் வழங்கியது மற்றும் இஸ்லாம் மதம் சார்ந்த மொபைல் ஆப்களை அறிமுகப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும், பெண்ணின் பெயரை 'ஹானியா' என்று மாற்ற திட்டமிட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மலேகான் - மலேசியா இணைப்பு
டிசிஎஸ் வழக்கில் கைதாகியிருக்கும் சக குற்றவாளியான டேனிஷ் ஷேக் புகார் அளித்த பெண்ணின் கல்வி சான்றிதழ் மற்றும் முக்கிய ஆவணங்களை வைத்திருந்ததாகவும், அவற்றை மலேகானில் (Malegaon) உள்ள ஒரு குழுவிடம் ஒப்படைக்க திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. மலேகான் என்பது நாசிக்-ல் மற்றொரு நகரம்.
மலேசியாவுக்கு வேலை என்ற பெயரில் புகார் அளித்த பெண்ணை அனுப்ப 'இம்ரான்' என்ற நபர் மூலம் திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகவும் நீதிமன்றத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பெண்களை மலேசியாவுக்கு பணிக்கு அனுப்பும் பின்னணியில் பணப் பரிவர்த்தனை இருந்ததா என விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதா கான் தலைமறைவு
நிதா கான் தற்போது தலைமறைவாக உள்ளதால் அவரது மொபைல் போனை பறிமுதல் செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் கோரினார். ஜாமீன் அளித்தால் சாட்சிகளை பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நீதிமன்றம் இதுவரை எந்தப் பாதுகாப்பும் நிதா கான்-க்கு வழங்கவில்லை. மே 2-ம் தேதி ஜாமீன் மனு மீது இறுதி முடிவு எடுக்கப்படும்.
பாதுகாப்பு தரப்பு வாதம்
நிதா கானின் வழக்கறிஞர் ராகுல் காஸ்லிவால், மகாராஷ்டிராவில் மதமாற்றத்துக்கு தடை சட்டம் எதுவுமில்லை என்றும், இந்த வழக்கில் மத உணர்வுகளை புண்படுத்தியதாக மட்டுமே குற்றச்சாட்டு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். உண்மையில் எந்த மதமாற்றமும் நடைபெறவில்லை என்றும், ஒரே வழக்கில் 9 FIR-கள் பதிவு செய்யப்பட்டிருப்பது தவறு என்றும் அவர் கூறினார்.
இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. மே 2-ம் தேதி நீதிமன்றம் முக்கிய முடிவை எடுக்கவுள்ளது.
-
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது?












Click it and Unblock the Notifications