கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட நுழைவுத் தேர்வு.. திடீர் அறிவிப்பால் மாணவர்கள் அலைக்கழிப்பு!
அகமதாபாத்: குஜராத்தில் உள்ள தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர இன்றும், நாளையும் நடைபெற இருந்த நுழைவுத் தேர்வுகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த நுழைவுத்தேர்வு எழுத, 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் பல மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் திடீரென நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

குஜராத்தில் உள்ள தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர இன்றும், நாளையும் நுழைவுத் தேர்வுகள் நடைபெற இருந்தன. இந்த நுழைவுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வழங்கப்பட்டிருந்த நிலையில் திடீரென நுழைவுத்தேவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் மற்றும் எதிர்பாராத தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, நாடு முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் ஜூன் 7 மற்றும் 8, 2025 அன்று திட்டமிடப்பட்டிருந்த நுழைவுத் தேர்வு (NFAT 2025) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் பல்வேறு கல்விப் படிப்புகளில் சேருவதற்கான NFAT தேர்வு 2025 எழுத திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்களுக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. ஏற்பட்ட சிரமத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட நுழைவுத் தேர்வுக்கான (NFAT 2025) தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து தேர்வு மையத்திற்கு டிக்கெட்டுகளை ரத்து செய்ய முடியாத விண்ணப்பதாரர்கள் தங்கள் அசல் டிக்கெட்டுகளை திருப்பிச் செலுத்துவதற்காக சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவிப்பில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, தேர்வு ஹால் டிக்கெட்டை பதிவிறக்குவதில் ஏற்பட்ட குளறுபடிகள் வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. பல விண்ணப்பதாரர்கள் சமூக ஊடகங்களில் இதுதொடர்பாக தங்கள் விரக்தியையும் அச்சத்தையும் வெளிப்படுத்தினர். இந்நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அறிவிக்கப்பட்டிருந்தது. நுழைவுத் தேர்வுக்காக ஏராளமான மாணவர்கள் டிக்கெட் புக் செய்து பயணித்திருந்த நிலையில் இந்த திடீர் ஒத்திவைப்பு தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நுழைவுத்தேர்வு எழுத, 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் பல மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் திடீரென நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications