நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் மனு தள்ளுபடி- டிச.19-ல் ஆஜராக கோர்ட் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சர்ச்சைக்குரிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் ஆஜராகக் கோரும் சம்மனுக்கு எதிராக தாக்கல் செய்த மனுக்களை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்ததது. அத்துடன் வரும் 19-ந் தேதி இருவரும் ஆஜராகவும் டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தொடங்கப்பட்டதுதான் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. பின்னாளில் பலத்த நஷ்டத்தை சந்தித்தது.

National Herald: Sonia, Rahul asked to appear in court on Dec 19

இந்த நஷ்டத்தை சரிகட்ட அப்பத்திரிகை நிர்வாகம் சுமார் 90 கோடி ரூபாய் வரை கடன்களை பெற்றிருந்தது. கட்சி விதிகளை மீறி.. இந்த கடன்களை தீர்க்க முடியாமல், அப்பத்திரிகை தவித்து வந்த நிலையில், சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் சேர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான பணத்திலிருந்து கட்சி விதிமுறைகளை மீறி 90 கோடி ரூபாயை அப்பத்திரிகைக்கு அளித்து, கடனை அடைத்தனர்.

இதற்கு பிரதிபலனாக அப்பத்திரிகைக்கு சொந்தமாக இருந்த அசையும் மற்றும் அசையா சொத்துகளான சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான சொத்துகளை இருவரும் அபகரித்துக் கொண்டனர் என்பது பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி புகார்.

இது தொடர்பான டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து இவரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இதை நிராகரித்த நீதிமன்றம் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.

இந்த வழக்கின் இன்றைய விசாரணையில் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் வரும் 19-ந் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+