பிக்பாஸ் டிவி ஷோவில் பங்கேற்க மறுத்தது ஏன்?: டிவி நடிகை விளக்கம்
மும்பை: பிக் பாஸ் 8 டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகை நெளஷீன் அலி சர்தார் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு பணப் பிரச்சினை காரணமல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
பிக்பாஸ் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியானது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது. இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்துள்ளது 8 வது சீசன் இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளது.
ஒரு வீட்டிற்குள் இருக்கும் பிரபலங்களின் செயல்பாடுகளை கேமரா கண்களைக் கொண்டு படம்பிடித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்புகின்றனர். இதில் பங்கேற்றவர்கள் பிரபலமடைந்துள்ளனர். பிக் பாஸ் 5 சீசனில் பங்கேற்ற சன்னிலியோன் தற்போது பாலிவுட் சினிமாவில் பரபரப்பாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிவி நடிகை நௌஷீன் அலி சர்தான் இந்த சீசனில் பங்கேற்பார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது. இதற்கான விளக்கத்தை அவரே கூறியுள்ளார்.

நடிகை போட்ட நிபந்தனை
நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சில நிபந்தனைகளை விதித்தேன். அது அவர்களுக்கு சரியாக வரவில்லை அதனால் என்னை அணுகவில்லை என்று கூறியுள்ளார்.

படுக்கை அறையில்
அதாவது ஆண் போட்டியாளருடன் ஒரே படுக்கையில் படுக்க மாட்டேன். தனியாக ஆண் போட்டியாளருடன் இருக்க மாட்டேன்.

கவர்ச்சி உடைகள்
எனக்கு அருகே ஆண் போட்டியாளர் யாரும் படுக்கக் கூடாது. கவர்ச்சிகரமான, உடல் அங்கம் தெரியும்படியான ஆடைகள் உடுத்த மாட்டேன்.

முடியை வெட்டமாட்டேன்
தலைமுடியை வெட்டிக் கொள்ள மாட்டேன் என்று அவர்களிடம் கூறினேன். எனது நிபந்தனைகளைச் சொன்ன பிறகு அவர்கள்தான் என்னிடம் மீண்டும் அணுகவில்லை என்று கூறியுள்ளார்.

சல்மான்கான்
பிக் பாஸ் போட்டியானது சல்மான் கான் போன்ற சூப்பர் ஸ்டார் நடத்துவது. அதில் பங்கேற்க யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. என்னைத்தான் அவர்கள் மீண்டும் அணுகவில்லை. மற்றபடி சம்பளத் தொகை பிரச்சினை எல்லாம் கிடையாது என்றும் நௌஷீன் அலி சர்தார் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications