சித்து பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமரீந்தர் சிங் விடாப்பிடி.. பஞ்சாப் காங்.கில் பரபர மோதல்!
போபால்: நவ்ஜோத் சிங் சித்து மன்னிப்பு கேட்க வேண்டும், அப்போதுதான் அவரை சந்திப்பேன் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் விடாப்பிடியாக இருக்கிறார். இதனால் பஞ்சாப்பில் இப்போதைக்கு மோதல் முடிய வாய்ப்பில்லை என்கிறார்கள்.
பஞ்சாப்பில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங்கிற்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது. 2017ல் இருந்தே சித்து முதல்வர் பதவிக்கு முயன்று வருகிறார்.
ஆனால் சித்துவிற்கு முதல்வர் பொறுப்பை வழங்கும் திட்டத்தில் டெல்லி தலைமை இல்லை. அடுத்த வருட சட்டசபை தேர்தலிலும் தனக்கு முதல்வர் வேட்பாளர் வாய்ப்பு கிடைக்காது என்பதால் பஞ்சாப் காங்கிரஸ் தலைவராகி விடலாம் என்று சித்து முயன்று வருகிறார். ஆனால் சித்துவிற்கு தலைவர் பதவி கிடைக்க கூடாது என்பதில் அமரீந்தர் சிங் உறுதியாக உள்ளார்.

சித்து
சித்துவிற்கு பதவி வந்தால் தனக்கு எதிராக செயல்படுவார், ஆட்சியில் இருந்தாலும் பயன் இருக்காது என்று அமரீந்தர் சிங் நினைக்கிறார். இந்த நிலையில்தான் டெல்லியில் அமரீந்தர் சிங் தரப்பும், சித்து தரப்பும் மாறி மாறி சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார்கள். பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரித் ராவத்துடன் அமரீந்தர் சிங் பல கட்ட மீட்டிங்குகளை நடத்தினார். இதில் சித்துவிற்கு தலைவர் பதவி கொடுக்க கூடாது என்று சிங் உறுதியாக அறிவித்துவிட்டார்.

சோனியா
சித்து, சிங் ஆகிய இரண்டு பேரையும் சோனியா காந்தி பகைக்க முடியாது. இதனால் அமரீந்தர் சிங்கிற்கு முதல்வர் பதவி, சித்துவிற்கு தலைவர் பதவி, அவரின் ஆதரவாளர்களுக்கு செயல் தலைவர் பதவியை கொடுக்கலாம் என்ற திட்டத்தில் சோனியா காந்தி இருக்கிறார். ஆனால் இதற்கு அமரீந்தர் சிங் பாதி மனதுடன் மட்டுமே ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

சோனியா முடிவு
சோனியா காந்தி எடுக்கும் முடிவை ஏற்க தயார். ஆனால் மூன்று கண்டிஷன் என்று அமரீந்தர் சிங் டெல்லி தலைமைக்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறாராம். அதன்படி சிந்துவிற்கு துணையாக நியமிக்கப்படும் செயல் தலைவர்கள் 3 பேரில் என்னுடைய ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்களுக்கும் கட்சியில் முடிவு எடுக்கும் அதிகாரம் இருக்க வேண்டும்.

கண்டிஷன்
அதோடு அமைச்சரவை மாற்றத்தில் சித்து தலையிட கூடாது நான் மட்டுமே தனித்த முடிவு எடுப்பேன். ஆட்சியில் அவர் தலையிட கூடாது. மூன்றாவதாக எனக்கு எதிராக செயல்பட்டதற்காக பொதுவில் சித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமரீந்தர் சிங் சோனியா காந்தியிடம் கண்டிஷன் போட்டதாக கூறப்படுகிறது. இந்த மூன்று கோரிக்கைகளுக்கும் ஓகே என்றால் சோனியாவின் முடிவை ஏற்பதாக அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளாராம்.

சித்து
சித்து என்னிடம் மன்னிப்பு கேட்காமல் அவரை நான் சந்திக்க மாட்டேன். அவரை தலைவராக ஏற்க வேண்டும் என்றால் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், என்று அமரீந்தர் சிங் விடாப்பிடியாக அறிவித்துவிட்டதாக பஞ்சாப் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிகின்றன. அமரீந்தர் சிங்கிடம் சித்து மன்னிப்பு கேட்க வாய்ப்பு இல்லை என்பதால் பஞ்சாப்பில் இப்போதைக்கு மோதல் முடிய வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.
-
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications