ஜம்மு காஷ்மீரை மொத்தமாக தூக்கிய காங்கிரஸ் கூட்டணி.. இந்தியா டுடே கணிப்பு
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபை தேர்தல் நடந்துள்ளது. மொத்தம் 3 கட்டங்களாக நடந்த தேர்தல் முடிவுகள் அக்டோபர் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்தியா டுடே சி வோட்டர்ஸ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு, சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தது. ஆனால் இப்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உள்ளது. அதோடு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் சந்தித்த முதல் தேர்தல் இதுவாகும்.

இந்த தேர்தலில் 3 முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியும், முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்து களமிறங்கி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 46 இடங்களில் வெல்ல வேண்டும் என்ற நிலையில், 3 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. கடந்த மாதம் 18 ம் தேதி 24 தொகுதிகளுக்கு, கடந்த மாதம் 25ம் தேதி 26 தொகுதிகளுக்கும், அக்டோபர் 1ம் தேதி 40 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.
இதில் பதிவான ஓட்டுகள் அக்டோபர் 8 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று மாலை 6 மணி முதல் வெளியாகி வருகின்றன.
இந்தியா டுடே சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் படி, ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில், காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி 40-48 சீட்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. நயா காஷ்மீர் என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்தித்த பாஜக 27- 32 சீட்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2014 தேர்தலில் தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்த மக்கள் ஜனநாயக கட்சி, இந்தமுறை 6-12 சீட்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தேசிய மாநாட்டு கட்சி தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவாக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.
காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி 38.7 % வாக்குகள் பெற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.பாஜக 22.9% வாக்கும் பெற வாய்ப்புள்ளதாகவும், மக்கள் ஜனநாயக கட்சி 10.2% வாக்கு பெற வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை, ஜம்மு மண்டலம், காஷ்மீர் பள்ளத்தாக்கு என்று இரண்டாக பிரிக்கின்றனர். இதில் ஜம்முவில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி 11-15 இடங்களிலும், பாஜக 27-31 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர். அதேபோல காஷ்மீர் பள்ளத்தாக்கில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி 29-33 சீட்களிலும், பாஜக 0-1 சீட்களில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி சுமார் 41% வாக்குகள் பெற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர். அந்தப் பகுதியில் அவர்கள் ஸ்வீப் அடிப்பதே, அவர்களின் முன்னிலைக்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று இந்தியா டுடே சி வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications