For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடியின் அரசியல் அனுபவத்தோடு ஒப்பிடுகையில் ராகுல் ‘சும்மா’...: பவார் கட்சி

Google Oneindia Tamil News

மும்பை: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலோடு ஒப்பிடுகையில் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி பலவழிகளில் மேலானவர் என புகழ்ந்துள்ளார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான திரிபாதி.

காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடனான உறவை முறித்துக் கொள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளதாகவும், அக்கட்சியின் பார்வை பாரதீய ஜனதாக் கட்சி மீது விழுந்திருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் தெரிவித்து வருகின்றன. அதன்படி, சமீபத்தில் அக்கட்சித் தலைவர் சரத்பவார் மோடியை ரகசியமாகச் சந்தித்ததாகச் சொல்லப் படுகிறது.

modi

ஆனால், இந்த செய்தியை மறுக்கும் வகையில், ‘கடந்த ஓராண்டில் நான் மோடியை சந்தித்தே இல்லை' என்று பவார் கூறியுள்ளார்.

ஆனபோதும், ஊடகங்களின் யூகத்தை நிரூபணம் செய்யும் வகையில் மோடியைப் புகழ்ந்து பேசியுள்ளார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான திரிபாதி.

இது குறித்து தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :-

'குஜராத் மாநிலத்தின் முதல்வராக நரேந்திரமோடி மூன்று முறை பதவி வகித்துள்ளார். இதனால் அவருக்கு அனுபவம் அதிகம். ராகுலுக்கு இதுபோன்ற அரசியல் அனுபவங்கள் குறைவு.

மேலும், 1984ம் ஆண்டு கலவரம் குறி்த்த ராகுலின் பேச்சுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

English summary
Nationalist Congress Party leader DP Tripathi took a jibe at Congress vice president Rahul Gandhi on Friday, saying Gujarat chief minister Narendra Modi is a better administrator than Rahul.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X