முறுக்கி நிற்கும் சிவசேனா: வெளியிலிருந்து பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பவார் கட்சி
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க அக்கட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க தயார் என்று தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக 110க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றினாலும் பெரும்பான்மை இல்லாத நிலை உள்ளது. இதனால் கூட்டணி அமைத்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தங்கள் கட்சியை சேர்ந்தவர் தான் முதல்வர் என்று பாஜகவும், என்ன நடந்தாலும் நான் தான் முதல்வர் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் தெரிவித்துள்ளனர்.

ஆட்சி அமைக்க பாஜக சிவசேனாவுடன் கூட்டணி வைக்க திட்டமிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் பாஜகவுக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க தேசியவாத காங்கிரஸ் முன்வந்துள்ளது. இதன் மூலம் பாஜக சிவசேனாவிடம் கூட்டணி வைக்காமலேயே ஆட்சிக்கு வர முடியும்.
இந்நிலையில் இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் பட்டேல் கூறுகையில்,
மகாராஷ்டிராவில் நிலையான அரசு அமைய வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பம். அதனால் பாஜகவுக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க தேசியவாத காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது என்றார்.
-
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?












Click it and Unblock the Notifications